Author Topic: தேனில் ஊறவைத்த பூண்டின் அற்புத மருத்துவ குணங்கள்...!  (Read 73 times)

Offline MysteRy


பண்டைய காலம் முதலே பூண்டை வெறும் உணவுக்காக மட்டும் அல்லாமல், மருத்துவ பொருளாகவும் பயன்படுத்தி வரப்படுகிறது. மேலும் பூண்டு மற்றும் தேன் இரண்டையும் மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுத்தி வந்தனர்.
பூண்டை ஜாடியில் போட்டு, அதன் மேல் பூண்டுகள் அனைத்தும் நன்கு மூழ்கும் அளவிற்கு தூய்மையான தேனை ஊற்றி ஊற வைக்கவும். ஒரு வாரக் காலம் இதை ஊற விடுங்கள். குளிர்சாதனப் பெட்டியில் வைத்தும் பயன்படுத்தலாம்.

தேனில் ஊறவைத்த பூண்டு உடல் எடை அதிகரிக்க, குறைக்க என இரண்டிற்கும் பயன் தரும் தன்மை கொண்டுள்ளது. உடல் எடை குறைக்க தண்ணீரிலும், உடல் எடை அதிகரிக்க பாலிலும் தேனை கலந்து பருகலாம்.

நல்ல மருத்துவ குணம் வாய்ந்த இந்த இரண்டையும் சேர்த்து உட்கொள்வதால், உடலில் நோய் எதிர்ப்பு அதிகரித்து, அன்றாடம் தாக்கும் உடல் நலப் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க முடிகிறது.

சளி, காய்ச்சல், இருமல், நோய் கிருமி தொற்று போன்றவை ஏற்படாமல் இருக்க சிறந்த மருந்தாகும். இந்த தேனில் ஊறவைத்த பூண்டு பயனளிக்கிறது.

பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் போன்றவற்றை தவிர்க்க முடியும். பூண்டு இன்ஸுலின் சுரப்பை அதிகரிப்பதால் சர்க்கரை நோயாளிகள் தாரளமாக எடுத்துக் கொள்ளலாம்.

தினமும் காலை வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் அளவு உட்கொண்டால் போதுமானது. ஒரு நாளைக்கு 5 அல்லது 6 முறை இதை அரை டீஸ்பூன் அளவில் உட்கொள்ளலாம்.

இதனை உணவு உண்ட பிறகு இதை உட்கொள்வது, இதன் செயலாற்றலை குறைத்துவிடும். காலையில் எழுந்ததும் இதை உட்கொள்வது நல்ல பலனை தரும். மாலை வேளையிலும் கூட இதை உட்கொள்ளலாம்....