Author Topic: வெந்தயக் கீரையின் அற்புதமான நன்மைகள்  (Read 17 times)

Offline MysteRy


கசப்பான ருசியைக் கொண்ட வெந்தயக் கீரையை பெரும்பாலானோர் உணவில் சேர்த்து சாப்பிடுவதை தவிர்த்து விடுவார்கள்.

ஆனால் இந்த வெந்தயக் கீரையில் எண்ணில் அடங்காத மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?

வெந்தயக் கீரையின் மருத்துவ நன்மைகள்

வெந்தயக் கீரையை தொடர்ந்து உணவுப் பழக்கத்தில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தின் பிரச்சனைகள் குறையும்.
வெந்தயக் கீரையோடு, நாட்டுக் கோழி முட்டையின் வெள்ளைக்கரு, தேங்காய் பால், கசகசா, சீரகம், மிளகு, பூண்டு ஆகியவற்றை சேர்த்து, அதனுடன் சிறிதளவு நெய் கலந்து சமைத்து சாப்பிட்டால் இடுப்பு வலி குணமாகும்.
கபம் சளித் தொல்லைகள் அதிகமாக உள்ளவர்கள் வெந்தயக் கீரை தினமும் சமைத்து சாப்பிட்டு வந்தால், விரைவில் குணமாகிவிடும்.
எப்போதும் மந்தநிலையை உணர்பவர்கள் அல்லது உடல் சோர்வாக இருப்பவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால், அது உடலின் செயலாற்றலை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
வெந்தயக் கீரையை தொடர்ந்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், கண் தொடர்பாக ஏற்படும் பிரச்சனைகளை தடுத்து, கண்பார்வை அதிகரிக்க உதவுகிறது.
நரம்பு தளர்ச்சி பிரச்சனை உள்ளவர்களுக்கு, வெந்தயக் கீரை ஓர் சிறந்த மருந்தாகும், ஏனெனில் இது நரம்பு தளர்ச்சியில் இருந்து விடுபட உதவுகிறது.
வயிற்று வலி, உப்புசமாக உணர்தல், வயிற்று எரிச்சல், இது போன்ற வயிறு சார்ந்த கோளாறுகளை குணமாக்க வெந்தயக் கீரை உதவுகிறது.
உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள், வெந்தயக் கீரையை சாப்பிடலாம். ஏனெனில் இது உடல் சூட்டை குறைத்து, குளிர்ச்சியாக்க உதவுகிறது.
தினமும் வெந்தயக் கீரையை உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொண்டால் மார்புவலி, தலை சுற்றல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைக் காணலாம்.