Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
பழங்களின் மருத்துவ குணங்கள்
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: பழங்களின் மருத்துவ குணங்கள் (Read 24 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222288
Total likes: 27546
Total likes: 27546
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
பழங்களின் மருத்துவ குணங்கள்
«
on:
July 01, 2025, 08:17:11 AM »
1.செவ்வாழைப்பழம் -கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்
2. பச்சை வாழைப்பழம் – குளிர்ச்சியை கொடுக்கும்
3. ரஸ்தாளி வாழைப்பழம்– கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது. ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து மூன்று வேளை கொடுத்தால் வயிற்றுப்போக்கு நின்று விடும்.
4. பேயன் வாழைப்பழம்– வெப்பத்தைக் குறைக்கும்
5. கற்பூர வாழைப்பழம்– கண்ணிற்குக் குளிர்ச்சி
6. நேந்திர வாழைப்பழம்– இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்
7. அப்பிள் பழம்– வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய
நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது.
8. நாவல் பழம்– நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும்.
9. திராட்சை- ஒரு வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களைப் பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினம் இருவேளை கொடுத்தால் இக்குறைபாடுகள் நீங்கும்.
10. மஞ்சள் வாழைப்பழம்- மலச்சிக்கலைப் போக்கும்.
11. மாம்பழம்- மாம்பழம் சாப்பிடுவதனால் இரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம். மாம்பழத்தில் விட்டமின் ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது இரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.
12. கொய்யாப்பழம்- உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும். சி உயிர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு விட்டமின் சி உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது. மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு பயன்பெறலாம். சொறி, சிரங்கு, இரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி கொள்ளலாம். விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் இரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.
13.பப்பாளி- மூல நோய், சர்க்கரை நோய், குடல் அலற்சி போன்றவைகளுக்கு சிறந்தது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் விட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், இரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒருவகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.
14. செர்ரி திராட்சை- கர்ப்பப்பை வியாதிகளுக்கு நல்லது.
15. அன்னாசி- அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது.
தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிபடாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும்.
அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.
16. விளாம்பழம்- விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்புசத்தும், சுண்ணாம்புச் சத்தும், விட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.
பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம்பழம் குணப்படுத்தும். விளாம்பழத்திற்கு இரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.
17. மாதுளம் பழம்- மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.
வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்தமான அனைத்து உடல்நல குறைபாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.
மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.
18. வாழைப்பழம்- மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும்.
எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும்.
திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தரிக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பாகும்.
19. ஆரஞ்சுப்பழம் – ஆரஞ்சில் விட்டமின் ஏ அதிகமாகவும், விட்டமின் சி-யும், பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும்.
இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும். பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல்வலி, பல் ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.
20. திராட்சைப் பழம்- எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக விட்டமின் ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். பொதுவாக சாpயாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாகவும், அதிகமாகயும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். திராட்சை சாற்றினை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
21. பேரீச்சம்பழம் – தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும். தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது. பல் சம்மந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.
22. எலுமிச்சம்பழம்- அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடும்.
கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும்.
நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும். எலுமிச்சை சாறுடன் சிறிய இஞ்சி துண்டை நறுக்கிப் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து தொடர்ந்து காலை மாலையாக மூன்று தினங்கள் கொடுத்து வந்தாலும் இருமல் நின்று விடும்.
வயிற்றில் இரைப்பை, குடல்களில் புண் ஏற்பட்டிருந்தால், வாயிலும் புண் ஏற்படும். வாயில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டுமானால் முதலில் வயிற்றில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டும்.
தலைவலி இருப்பவர்கள் சூடான கப் காபியில் அரை எலுமிச்சை பழத்தினை பிழிந்து 3 நாட்கள் குடித்து வந்தால் பிறகு தலைவலியே வராது.
தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சை பழத்தினை இரண்டாக பிளந்து ஒரு பாதியை கொட்டிய இடத்தில் நன்றாக தேய்க்க வேண்டும். இவ்வாறு இரண்டு துண்டுகளையும் தேய்த்துவிட்டால் சிறிது நேரத்திற்கெல்லாம் விஷம் இறங்கி வலி நின்றுவிடும்.
எலுமிச்சம் பழத்தினை அடிக்கடி உபயோகித்து வருபவர்களுக்கு உஷ்ண அதிகரிப்பால் உண்டாகும் வயிற்று வலி, பித்தத்தால் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகள், உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் தொந்தரவுகள், மலசிக்கல், உஷ்ண இருமல் ஆகிய தொந்தரவுகள் வராது.
23. பலாப்பழம்- பலாப்பழமும் மருத்துவபயன் மிக்கதாகவே இருக்கின்றது. இதில் விட்ட மின் ஏ உயிர்சத்து அதிகம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும். விட்டமின் ஏ உயிர்சத்திற்கு தொற்று கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் தொற்றாது...
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
பழங்களின் மருத்துவ குணங்கள்