Author Topic: ❤️❤️ நீ நீயாக இரு! (படித்ததில் பிடித்தது) ❤️❤️  (Read 1157 times)

Offline VenMaThI

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 433
  • Total likes: 2002
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
நீ நீயாக இரு!

தங்கம் விலை அதிகம் தான்
தகரம் விலையோ மலிவு தான் - ஆனால்
தகரத்தை கொண்டு செய்யவேண்டியதை
தங்கத்தை கொண்டு செய்ய முடியாது..
தகரம் மட்டமல்ல, தங்கமும் உயர்ந்ததல்ல
எனவே நீ நீயாக இரு!

கங்கை நீர் புனிதம் தான்
அதனால் கிணற்று நீர் வீண் என்றாகாது
தாகம் என்று வந்துவிட்டால்
கங்கை என்ன கிணறு என்ன.. எல்லாம் ஒன்றுதான்
எனவே நீ நீயாக இரு!

காகம் மயில் போல் அழகில்லை என்றாலும்
படையல் என்னவோ காக்கைக்கு தானே
எனவே நீ நீயாக இரு!

நாய்க்கு சிங்கம் போல் வீரம் இல்லை தான்
ஆனால் நன்றி இருப்பதோ நாயிடம் தானே..
எனவே நீ நீயாக இரு!

இவுலகில் எதுவுமே உயர்ந்ததில்லை
எதுவுமே தாழ்ந்ததில்லை
அனைத்துமே காரணம் கொண்டு படைக்கப்பட்டுள்ளது
எனவே நீ நீயாக இரு!!!!!!!

Offline SweeTie

யதார்த்தமான   வரிகள்.   அது அதுக்குன்னு  ஒரு  நியதி  இருக்கு.  அதை மீறும்போதுதான்   பிரச்சனையே   உருவாகிறது.    சிறப்பான கவிதை வெண்மதி