Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 373  (Read 4101 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 373

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1902
  • Total likes: 5922
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀

 நீ வந்ததும்...

நீ வந்ததும்
ஒரு பார்வை
பூத்தது,

நீ வந்ததும்
இரு இதயங்கள்
நிமிர்ந்தன,

நீ வந்ததும்
மூன்று மௌனங்கள்
மொழியாகின,

நீ வந்ததும்
நான்கு கனவுகள்
கலந்தன,

நீ வந்ததும்
ஐந்து நொடிகள்
நம் உலகமாகின,

நீ வந்ததும்
ஆறு உணர்வுகள்
உயிரோட்டம் கண்டன,

நீ வந்ததும்
ஏழு வண்ணங்கள்
வானில் பிறந்தன,

நீ வந்ததும்
எட்டு திசைகளும்
உன்னையே பேசின,

நீ வந்ததும்
ஒன்பது தானியங்களும்
விழியில் அறுவடை ஆகின,

நீ வந்ததும்
பத்து மெய்கள்
உன்னையே நுகர்ந்தன,

நீ வந்ததும்
பதினொன்று முத்தங்கள்
நம் பாசத்தைக் கடத்தின,

நீ வந்ததும்
பன்னிரு மாதங்கள்
நிமிடங்களாய் நின்றன,

நீ வந்ததும்
என் வாழ்நாள் முழுவதும்
நான் நீயாக மாறின.


Offline Lakshya

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1042
  • Total likes: 1836
  • Karma: +0/-0
  • Dream it. Wish it. Do it ✨🦋
மழையில் உறைந்த நிமிடம்!!!

மழைத்துளிகள் நம் மேனியில் விழ...
இரு இதயங்கள் இசை பாடிய தருணம் அது...

உலகை மறந்து நின்றேன் உன் முன்...
ஒரே குடையின் கீழ் நீயும் நானும்...

உன் பார்வையில் நொடி சிலிர்த்தேன்... நீ பேசாமல் இருக்க, என் இதயம் பதைக்க, உன் விழிகளை பார்த்து ரசித்தேன்...

இருளின் இடையில் நீ ஒளியாய் வந்தாய்...
மழைத்துளிகள் நம்மை ஆசிர்வதித்த நிமிடம் உறைந்து விடாதே...

வார்த்தைகள் தேவையா நீ என் முன் நிற்கையில்... காலம் முழுதும் காத்திருப்பேன் உன் கரம் பிடிக்க...

என் கண்கள் உன்னை படம் பிடித்தது நீ என்னை பார்த்து ரசித்தபோது...
உன் தோளில் சாய ஆசைப்பட்டது உள்ளம்...முடியவில்லையே!!!

மின்னல் அடிக்கும் முன், உன் சிரிப்பில் விழுந்துவிட்டேன் ...
இடி இடிக்கும் சத்தம் கேட்டதும்,நீ என் கையை பிடித்தது ஓர் அழகிய ஓவியம் போல என் மனதில் பதிந்தது...
« Last Edit: June 02, 2025, 03:28:50 PM by Lakshya »

Offline VenMaThI

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 427
  • Total likes: 1972
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum


இருட்டான நம் வாழ்க்கை இன்று
இடியுடன் கூடிய மழையால் மாறும்
இன்று இணைந்த இக்கைகள் இனி
என்றும் பிரியாத நிலையை அடையும்...

காதல் கொள்ளும் நம்மைக் கண்டு
காற்றும்  கூட சற்று நகர்ந்து செல்லும்
மகிழ்வான இந்த ஜோடியைக்கண்டு.. மழைத்துளியும்
மரக்கிளையில் மறைந்திருந்து மயக்கம் கொள்ளும்...

நம்மைச்சுற்றியுள்ள அனைத்தும்
நம் மேல் காதல் கொள்ளும்
நம்மை நாமே மறந்த இந்த நொடி - நம்
வாழ்க்கையின் விருட்ச விதையாய் மாறும்...

ஒவ்வொரு துளியிலும் நம் முகமே தெரியும் - இதை
மழையும் தன் கைபேசியில் படம் பிடிக்கும்..
உலகின் உன்னத ஜோடி என ஊடகத்திலும் பதிவிடும்
அதைக்கண்டு இந்த ஊரே நம்மை கண் வைக்கும்...

அய்யகோ ..
கண்ணிலிட்ட மை அதை இந்த மழை வந்து அழித்ததே
திருஷ்டி கழிய இன்நொடியில் நான் என்ன செய்வேன்...
ஒரு இடி வந்து நம்மை பயமுறுத்தாதா - அந்த பயத்தால்
நம் கண்திருஷ்டி எல்லாம் கழியாதா??

என்னவனே இனி என்ன நடந்தாலும் சரி
நாம் எங்கு சென்றாலும் சரி
இன்று பிடித்த உன் கைகளை இருக்காப்பற்றிக்கொள்ளவேன்
இனி உமை விட்டு ஒரு நொடியும் பிரியேன்..

அழுத காலங்கள் முடியட்டும் - நம்
அழகிய காலங்கள் தொடங்கட்டும்
காலம் முழுதும் உன்நோடே கழிந்திடுவேன்
அடுத்த நொடி மரணம் கூட சிரிப்புடன் தழுவிடுவேன்...

« Last Edit: June 02, 2025, 06:26:48 PM by VenMaThI »

Offline Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 311
  • Total likes: 1232
  • Karma: +0/-0
  • 🔥தீதும் நன்றும் பிறர்தர வாரா 🔥
    • Google

பொழுதனினும் பேசிய
நேரங்களில்
இதழ்களில் படர வைத்தாய் புன்னகையை...
மெளனித்து பிரியும் தருணம்
எங்கிருந்து வந்ததோ மழை...
ஒற்றை குடைக்குள் நம்மை அடைக்க
வரவைத்தாயோ உன் கூட்டுக்களவாணி மழையை!!!

பூமி எங்கும் குளிர்ந்து கிடக்க
நம்மிடம் ஏனோ வெப்பம் பரவ...
வார்த்தையை மறந்து இதழ்கள் பேச
மூடிய விழிகளுக்குள் மின்னல் வெட்ட
இதயத் துடிப்பு செவிகளில் கேட்க
இறுகப்பற்றிய கைகள் விலக மறுக்க....

கரிக்கும் உமிழ்நீரின் சுவை கூட
மதி ஏனோ மயக்கம் கொள்ள...
சாலையில் ஓடிய தண்ணீரில்
நாணமும் கரைந்து ஓட...
அடை மழை நின்றும்
நம் அன்புமழை தொடர்கிறது....
« Last Edit: June 05, 2025, 08:32:56 AM by Yazhini »

Offline Thenmozhi

  • Jr. Member
  • *
  • Posts: 84
  • Total likes: 597
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
கனவு காதலா

அன்பான எதிர்கால காதலனே
ஆசைக்குரிய மன்னவனே
இன்முகத்துடன் இயற்றுகின்றேன்
ஈடு இணையற்ற நம் காதலை கவி வடிவில்

உன் கண்களை என் கண்கள் பார்க்க முடியாமல் தவித்த போது தான்
ஊகித்து கொண்டேன்
என் மனதில் எழுந்தது காதல் என்று
ஏனோ தெரியவில்லை அடி மனதில் பட்டாம் பூச்சி பறந்தது

நீ வானவில்லாய் இரு காதலா
நான் அந்த ஏழு நிறங்களாய் என்றும் இருப்பேன் இணைபிரியாமல்
இன்னிசை கேட்டு இரசித்த நான் இப்போ உன் காதல் மொழி கேட்டு இரசிக்கிறேன்

உன்னை தேடுவதில் உணர்கிறேன் சுவாரஸ்யம்
உன்னையும் உன் நினைவுகளையும் சுமக்கிறேன் காதல் வரமாக
பல உறவுகள் உனக்கிருந்தாலும்
உன் இதயத்தின் சொந்தகாரியாக நான் மட்டுமே இருக்கவேண்டும் வாழ்நாள் முழுவதும்

நான் இருக்கிறேன் என்று சொல்லும் உன் அரவணைப்பில்
எங்கோ ஓடி மறைகிறது என் துன்பம் எல்லாம்
உனக்காக காத்திருப்பதில் உணர்கிறேன்
உன்னில் என் எதிர்காலம் ஒளிந்திருப்பது
கற்பனை உலகும் எனக்கு பிடித்து விட்டது ஏனெனில்
ஆசை காதலா நீ உலா வருவதால்

உறங்கும் போது கனவிலும்
விடிந்ததும் நினைவிலும்
நான் வாழும் வரை என் உயிரிலும் நீயே இருப்பாய் கனவு காதலா

இயற்கை அழகை இணைந்தே இரசித்திடுவோம்
கடற்கரையோரத்தில் ஒதுங்கிடும் கடல் அலையில் பதித்திடுவோம் நம் பாத சுவடு
இரவு நேரத்தில் வானத்தில் நிலாவை கை கோர்த்து இரசித்திடுவோம்
நமக்கு குடை எதுக்கு -வா
அந்த மழையில் நனைந்து காதல் கானம் மீட்டலாம்

நோயினில் நான் வாடும் போது நீ எனக்கு தாயாக
புத்திமதி கூறுவதில் தந்தையாக
சண்டை போட்ட பின்பும் கூடி உண்பதில் அண்ணணாக
கலகலப்பாக பேசி மகிழ உற்ற நண்பனாக
காதலில் மிகையில்லா காதலனாக
குறும்பு செய்யும் போது என்னை குழந்தையாக பார்த்து இரசிப்பவனாக
இருப்பாயா என் கனவு காதலா
கல்லறைவரை நம் காதல் காவியம் படைக்கும்

அன்புடன் உன்னவள் தேன்மொழி
« Last Edit: June 04, 2025, 06:17:39 PM by Thenmozhi »

Offline Madhurangi

  • Full Member
  • *
  • Posts: 246
  • Total likes: 825
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
மழை இரவில் உன்னருகில் ..

அவன் : நீ மறுத்த நெருக்கத்தை… இயற்கையே மழை வடிவில் தந்தது பார்த்தாயா??

அவள் : ஒ.. மழை நின்றபின் விலகும் குடை போல நீயும் எனை விலகுவாயோ ???

அவன் : அடி போடி பைத்தியக்காரி.. மழை நின்றாலும் மனம் முழுதும் குடை போல் நிறைந்திருக்கும்  உன் நினைவுகள் உனை விலக விடுமா??

அவள் : பேச்சில் உனை வெல்ல முடியுமா??

அவன் : நானா?? வெறும் கண் ஜாடையிலேயே என் மனம் வென்றவள் நீயடி..

அவள்: காதை பிளக்கும் இடி ஒலியும், கண்ணை பறிக்கும் மின்னலின் பின்னணியில் கூட காதல் மொழி பேச உன்னால் மட்டும் எப்படி முடியுதோ??

அவன்: உன்  கன்னச்சிவப்பை படம் பிடித்து காட்டும் மின்னலும் , பயத்தில் நீ என்னை நெருங்க செய்யும் இடி ஒலி கூட காதலின் வரங்கள் தான்..

அவள்: குளிர்ந்த மழையிலும் இத்தனை கதகதப்பு தருவது இந்த ஒற்றை குடையா ??  உன் அருகாமையா?? இல்லை வெட்கமூட்டும் உன் காதல் மொழிகளா??

அவன்: நெஞ்சம் நிறைந்த காதலுடன்.. துடிக்கும் இதயத்தின் படபடப்பால் சூடான என் சுவாசகாற்றுதான்..

அவள்: மழை எனக்கு பிடிக்காது என்றே நினைத்திருந்தேன்.. இன்று உன்னுடன் நனைவதே என் பிடித்த  நினைவாயிற்று..

அவன்: மழையினை விட உன் சிரிப்பும் வெட்கமுமே என் நெஞ்சில் நீங்கா நினைவாயிற்று..

அவள்: நாளை மாலையும் மழையாம் வந்துவிடு எனை அழைக்க ..

அவன்: உத்தரவு என் தேவி.. நீயும் மறக்காமல் குடையினை மறந்து வந்துவிடு .. ❤️❤️
« Last Edit: June 02, 2025, 12:54:14 PM by Madhurangi »

Offline Titus

  மழைத் துளிகள் மெதுவாய் விழும்போது,
உன் நெருக்கம் என் சுவாசத்தில் கரைந்தது,
ஒவ்வொரு துளியும் உன் முத்தம் போல்,
என் தோலில் காதல் கவிதை எழுதினது.

நாம் கைகளில் கைகளைப் பொருத்திக் கொண்டபோது,
காடு கூட நம்மைப் பார்த்து மௌனமடைந்தது,
உன் விழிகள் சொன்ன மௌன மொழியில்,
என் உள்ளம் முழுக்க நீயே நிரம்பினாய்.

மலர்ந்த பூக்களின் வாசனையைவிட,
உன் அருகில் இருக்கும் நிமிடம் இனிமைதான்,
மண்ணின் வாசனையில் நம் நட்பும் காதலும்,
மழையில் நனைய நெருக்கம் ஆனது.

மழையில் நனையவே, நம் ஓரமுள்ள நிழலில்,
உன் முத்தம் என் உலர்ந்த விழிகளைச் சுட்டியது,
அந்த நொடி... உலகமே நிறுத்தப்பட்டது,
மழை கூட நம் காதலுக்குத் தாளம் போட்டது.

பசுமை இலைகளில் விழும் துளி போல,
நீ என் மீது மெதுவாய் சாய்ந்தாய்,
காற்று நம் அருகே முத்தமிட்டது,
நம் புன்னகையில் காதல் வெளிச்சம் பொங்கியது.

உன் சிரிப்பில் பூமி சுருங்கி நம் இடையே வந்தது,
நம் இதயங்கள் ஓர் ஓரத்தில் ஒன்றாயின,
நனையும் பாதையில் நாங்கள் நடந்தபோது,
ஒவ்வொரு அடியிலும் காதல் மலர்ந்தது.

இயற்கை முழுவதும் நம் காதலுக்குச் சாட்சி,
மழைதுளிகள் கூட நம் முத்தங்களை எண்ணின,
அழகின் உச்சி ஆன அந்த மழைக்காலம்,
நம் அன்பு துளிகளால் சங்கீதம் ஆனது.

நீயும் நானும் – மழையிலும் மண்ணிலும்,
நொறுங்காத நிழல்கள் போல ஒட்டிப் பினைந்தோம்,
ஒரு முத்தத்தில் ஆரம்பமான காதல்,
மழையில் நனைந்தது... என்றும் பசுமையாய் வாழ்கிறது 
« Last Edit: June 03, 2025, 11:51:13 PM by Titus »

Offline Reacher




இன்னும் ஓர் இரவு !
இன்னும் ஓர் நிலவு..!


குடையில் அவன்
                        அவன் விழிகளில் நான்   
 
பூக்கள் பூக்கும் தருணம்
பார்த்தேன் அவன் புன்னகையில்

ரோஜா மலரின் வாசம்
என்னுடையவனின் பாசம்


என் எதிரில்
என் அருகில்
என் நிஜத்தில் என் நிழலாக இருப்பவன்

என் உயிரில்
என் உணர்வில்
என் அகத்தில்
என் முகத்தில் என்றும் ஜொழிப்பவன்

என்னுள் அறியா ஓர் மாற்றம்
எனக்காக மட்டுமே இருக்கும்
                                                       இவன் நேசம்..!

என்றும் அவன் கைக்குள் நான்
இனிதே தொடங்கும் எங்கள் பயணம்

இன்னைக்கு என் அருகில் இவன்
இவன் கை என் மேல படுது
இவன் மூச்சுக்காற்று
என் காதுல கேட்டுட்டே இருக்கு
திரும்பவும்  நான் குட்டி
                                             மழைலையாக
                                             மாறிய தருணம்

இந்த ஓர் நினைவு
இன்னும் சில தூரம்
இன்னும் சில நேரம்

அவனும் நானும் வாழ்ந்த காலம் சாகாது,!!
« Last Edit: June 02, 2025, 12:55:51 AM by Reacher »
Netru nalai maranthu po.!
                                             ' indre ' kadaisi endru valnthu po..!!

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1264
  • Total likes: 1097
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
மாறிப்போன வானிலையால் மனநிலையும் மாறியது
நெருக்கத்தில் நாங்கள் கட்டியணைத்து 
மெல்லிய நடுக்கம் அமைதி பேச்கூடன் மூச்சுக்காற்று முட்ட
ரகசியமாக ரசித்துக்கொண்டே
காதல் மழையில் நனைந்தோம் குடைக்குள்

மேக கூட்டங்கள் ஓன்று இணைந்து
மழை துளியாய் எங்களை நனைக்க
மெல்லிய அவள் கை என்னை
அணைத்து அவளின் இதய அன்பினை இதழ்களால் முத்தமிட்டு
அனந்தம் அடைந்தோம் குடைக்குள்

மேகத்தில் மறைந்து கொண்ட நிலவு போல்
என்னுள் மறைந்து ஒளிந்து கொண்டாய்
வாடைக்காற்று தென்றலாய் வீசி
குளிர்ந்த காற்றாய் எங்களைத் திண்ட
 மண்ணின் நறுமணம்
சுவாசித்து மனத்தால் பேசி
கண்களால் காதலைப் பாரிமாறி
கொண்டோம் குடைக்குள்
« Last Edit: June 01, 2025, 11:51:19 PM by RajKumar »

Offline TiNu

இருள் கவ்வும் ஓர் அழகிய இரவு நேரத்தில் .
இதமாக வீசும் தென்றலின்.. குளிர் காற்றில்
 
எங்கோ தூரத்தில் மின்னும் கீற்றின்  ஒளியில் .
முத்துகளாய் சிதறும் மழைத்துளியின்.. கீழ்..

கொட்டும் மலையில்..  என் சிறு  கரங்களை 
நானும் மயில் தோகையென விரிந்து நிற்க..

என் நிழலில் தன்னிலை மறந்து காதல்   
மொழி பேசும்.. இரு அன்பு உள்ளங்கள்.. .

ஒரு புறம் குளிர் காற்று என்னை வாட்ட...
மறுபுறம் மழை துளிகள்.. பட படவென

என் மேனியெங்கும் பட்டுத்தெறித்து. ..
வீசும் குளிரில் நடுநடுங்க செய்கிறதே...

குளிரோ.. காற்றோ.. கொட்டும் மழையோ.. எது எப்படி
இருந்தாலும்.. நானே இவர்களின் காவலாளியாவேன்

அவ்விரு உள்ளங்களும்.. நெடுநாள் பிரிவிற்கு
பின்னே சந்தித்து... பேசி கொள்ளும் தருணம் இது...
 
இவர்களின் பிரிவின் காரணம் நான் அறியேன்..- ஆனால்
இவர்கள் பேச்சில் நான் புரிந்துகொண்டது.. யாதெனில்

இரு மனங்களும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமல்
வாக்குவாதம் முற்றி.. பெரும் சண்டையிட்டு பிரிந்த இவர்கள்..

இருவரின் தனிமைகள்..  கற்றுக்கொடுத்த பாடத்தில்..
நெடுநாட்கள்.. ஒருவரை ஒருவர் காணாது.. தவித்து..

இக்கணம் தான்,
தன் தவறை உணர்ந்து..என் கைகளின் இடையில்..
தூய காதலுடன்.. . இணைந்த இதயங்கள் இவர்கள் ..

குளிரோ.. காற்றோ.. கொட்டும் மழையோ - அவர்களை
என்றுமே பிரிய விடமாட்டேன்.. என காத்து நிற்கும் நான்(குடை)..


« Last Edit: June 02, 2025, 12:04:15 AM by TiNu »