Author Topic: நண்டு பொரியல்  (Read 1207 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
நண்டு பொரியல்
« on: April 16, 2012, 11:01:25 PM »
நண்டு - 6
வெங்காயம் - 2
நாட்டுத் தக்காளி - 3
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 8 பல்
இஞ்சி - ஒரு துண்டு
மிளகாய் வற்றல் - 4
புளி - சாறு 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
 

முதலில் வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு, இஞ்சி மற்றும் மிளகாய் வற்றல் முதலியவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலை வதக்கி தக்காளி போட்டு மஞ்சள் தூள் போட்டு நன்றாக வதக்கவும்.
அதில் அரைத்த மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு, இஞ்சி, மிளகாய் வற்றல் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி புளிச்சாறு உப்பு போட்டு அரை டம்ளர் தண்ணீர் விட்டு கலக்கவும்.
பிறகு அதில் நண்டை போட்டு நன்றாக கொதி வந்தவுடன் மூடி தீயை குறைத்து வைத்து சுருள சுருள கிண்டி கொத்தமல்லித் தழை தூவி இறக்கி வைக்கவும். நண்டு வேக வைக்கவும் போது ஓடுகளை தட்டி ஓட்டை செய்து மசாலாவை உள்ளே விடவும் அப்போதுதான் நண்டு உள்ளே மசாலா சாறும்.

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்