Author Topic: நண்டு ரிச் குருமா  (Read 1290 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
நண்டு ரிச் குருமா
« on: April 16, 2012, 10:46:56 PM »
நண்டு - ஒரு கிலோ
தேங்காய் பால் - மூன்று டம்ளர்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி,பூண்டு அரவை - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 50 மிலி
மல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
அரைக்க:
தேங்காய் துருவல் - 6 தேக்கரண்டி
முந்திரி - 5
பூண்டு - 4
மஞ்சள் தூள் - 1 1/2 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 2 தேக்கரண்டி
சோம்பு தூள் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
 

நண்டை வெட்டி நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைத்து வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால் ஊற்றி அதில் அரைத்த மசாலவை கரைத்து தேவையான உப்பு போட்டு கலந்து கொள்ளவும்.
அதில் பச்சை மிளகாய் கீறியும், மல்லி தழையை பொடியாக நறுக்கியும் போடவும்.
ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கவும்.
கொஞ்சம் வதங்கியதும், இஞ்சி,பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.
வதங்கியதும் மிளகாய் தூள், கறிவேப்பிலை போட்டு இரண்டு நிமிடம் வதக்கி விட்டு கரைத்து வைத்திருக்கும் மசாலா கலவையை ஊற்றி விடவும்.
அதன்பிறகு கழுவி வைத்திருக்கும் நண்டை மெதுவாக போட்டு கொதிக்கவிடவும்.
கொதிக்க ஆரம்பிக்கும் போது மூடி போட்டு அடுப்பை மிதமாகவே வைத்து இருபது நிமிடம் கொதிக்கவிடவும்.
பிரண்டார் போல் எண்ணெய் விட்டுக் கொண்டு இருக்கும்.
அப்போது அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான நண்டு ரிச் மசாலா தயார்.

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்