Author Topic: Minnalai pidithu💕💕  (Read 1902 times)

Offline Asthika

  • Sr. Member
  • *
  • Posts: 262
  • Total likes: 611
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
Minnalai pidithu💕💕
« on: May 08, 2025, 08:07:23 PM »
திரைப்படம் : ஷாஜஹான் (2001)
இசை : மணி ஷர்மா
பாடியவர் : உன்னி மேனன்
பாடலாசிரியர் : வைரமுத்து



மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து
மேகத்தில் துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்
இப்படி இன்னொரு பெண்மையைப் படைக்க
தன்னிடம் கற்பனை தீர்ந்ததை எண்ணித்தான்
பிரம்மனும் மூர்ச்சையுற்றான்

மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து
மேகத்தில் துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்
இப்படி இன்னொரு பெண்மையைப் படைக்க
தன்னிடம் கற்பனை தீர்ந்ததை எண்ணித்தான்
பிரம்மனும் மூர்ச்சையுற்றான்

அவளின் நாசிக்குள் நுழைந்த காற்று
உயிரைத் தடவி திரும்பும் போது
மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே....
ஒஹோ மழையின் துளிகள் அவளை நனைத்து
மார்பு கடந்து இறங்கும் பொழுது
முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே....

மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து
மேகத்தில் துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்

நிலவின் ஒளியைப் பிடித்துப் பிடித்து
பாலில் நனைத்து பாலில் நனைத்து
கன்னங்கள் செய்து விட்டான்....
உலக மலர்கள் பறித்து பறித்து
இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து
பெண்மை சமைத்து விட்டான்....
அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா
என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்தது
அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா...
ஏஹே கவிதை என்பது மொழியின் வடிவம்
என்றொரு கருத்தும் இன்று உடைந்தது
கவிதை என்பது கன்னி வடிவமடா...
மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து
மேகத்தில் துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்


மின்மினி பிடித்து மின்மினி பிடித்து
கண்களில் பதித்து கண்களில் பதித்து
கண்மணி கண் பறித்தாள்...
தங்கத்தை எடுத்து அம்மியில் அரைத்து
மஞ்சளாய் நினைத்து கன்னத்தில் குழைத்து
ஜீவனை ஏன் எடுத்தாள்...
காவித் துறவிக்கும் ஆசை வளர்ப்பவள்
ஆறுக்கும் புல்லுக்கும் ஆண்மை கொடுப்பவள்
பெண்களின் நெஞ்சுக்கும்
பித்தம் கொடுப்பவளே..
ஒஹோ தெரிந்த பாகங்கள் உயிரைத் தந்திட
மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட
ஜனனம் மரணம் ரெண்டும் தருபவளே...
மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து
மேகத்தில் துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்.....