Author Topic: லைக் கதை !  (Read 956 times)

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1936
  • Total likes: 6016
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
லைக் கதை !
« on: May 06, 2025, 06:11:30 PM »

லைக் கதை !

இன்றைய உலகம்
மிகவும் வித்தியாசமானது ,
வார்த்தைகள் தேவை இல்லை,
லைக்குகள் பேசும்.

சிலர் இணையத்தில்
பதிவிடும் செய்தி
மக்களை சேர்ந்ததா இல்லையா
என்று நினைக்க மாட்டார்கள்
ஆனால்
லைக் போட்டார்களா இல்லையா
என்பதே அவர்கள் மனதில் எழும்
கேள்வியாக இருக்கும்

ஒருவருக்கு ஒருவர்
அருகில் இருக்க,
தொலைதூரம் போல்
உணர்த்தும் இந்த இணையம்.

ஒரே பதிவிற்கு
பலர் கமெண்ட்
செய்திருப்பார்கள் ,
ஆனால் யார் யாரை
லைக் செய்கிறார்கள்
என்பதே பெரும் ரகசியம் !

நட்பின் எண்ணிக்கை
நம் எண்ணங்களில் இல்லாமல்
ஒரு வலைதளத்தில் உள்ள பதிவின்
லைக் எண்ணிக்கை சொல்லுகிறது.

இதுதான் இன்றைய காலத்தில்
புதிய பேசும் வழி.
வார்த்தைகள் குறைந்து,
உணர்வுகள் சுருங்கி,

நம் தொடர்புகள் தற்போது
தட்டும் விரல்களில் தான் வாழ்கின்றன.

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1273
  • Total likes: 4368
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: லைக் கதை !
« Reply #1 on: May 06, 2025, 08:30:24 PM »

ஓர் இரங்கல் செய்திக்கும் குவியும் லைக்குகள்

இறந்ததில்  மகிழ்ச்சி என்று கொள்வதோ?

என்ன எதுவோ நானும் போட்டுட்டேன் உங்கள் பதிவிற்கு ஓர் லைக்ஸ்  ;D ;D :D

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1936
  • Total likes: 6016
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
Re: லைக் கதை !
« Reply #2 on: May 06, 2025, 09:48:17 PM »
மச்சி மிக்க நன்றி ! லைக்குக்காக இல்ல என் கிறுக்கல படிச்சதுக்கு 🤣🤣