Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 370  (Read 2870 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 370

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 268
  • Total likes: 1059
  • Karma: +0/-0
  • 🔥தீதும் நன்றும் பிறர்தர வாரா 🔥
    • Google
தனியே நான்செல்ல துணையாக வந்தவனே
தடுமாற்றத்திலும் நிழலாக நின்றவனே.
பசுமை நிறைந்த கழனி போல
பாவை மனதில் நிறைந்தவனே
பருவம் எய்திய நெற்கதிர் போல
வெட்கி நாண செய்தவனே...

தென்றலோடு இசைந்தாடும் நாற்று போல
உன்னில் அசைந்தாடும் என்வாழ்வு
மலைகளில் மோதும் மேகம் போல
உனில் மோகம்கொள்கின்றது மனது.
மழைக்காக ஏங்கும் பயிர் போல
நீயின்றி வாழ்வது கொடிது....
செம்புலம் சேர்ந்த நீரைப் போல
உன்னைச் சேர்வதே நிறைவு...

என் வழியெங்கும் மன்னவன் உனது
பாதச்சுவடுகள் பின்தொடர கூடுமோ?
உன் புன்னகையிலே மங்கை எனது
புவியின்பம் கலந்திட இயலுமோ?
உன்கரம் சேர ஏங்கும் மனது
குளிர்ந்திட திருமணநாளும் சேருமோ?
« Last Edit: May 16, 2025, 04:17:23 PM by Yazhini »

Offline Asthika

  • Sr. Member
  • *
  • Posts: 262
  • Total likes: 609
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum

நட்சத்திரம் போல ஒளிரும் நீ,
நடந்த பாதையில் நிழலாய் நீ.
சுமைகள் சில வந்தபோதும்,
சுருங்காத காதலாய் நீயிருந்தாய்.


காற்றாய் வந்து கலந்தாய்,
கண்ணீரை சிரிப்பாக்கினாய்.
என் எல்லா நாளும் பரிசாக,
உன் தோளில் தங்கிய காதல் நானாகினேன்.


சாதாரண நாட்களைக் சிறப்பாக்கும்,
சின்ன சிரிப்போடு நெஞ்சை நனைக்கும்,
என் காதலின் உண்மை துணை –
நீயல்லவா?

உன் அருகில்
புயல்கள் வந்தாலும் பயமில்லை,
உன் அருகில் நானிருக்கிறேன்.
உன் கைபிடியில் என்னை மறந்தேன்,
அது தான் காதலின் உண்மையான துணை

நடக்கையில் கைகொடுத்து,
நாளெல்லாம் சிரிக்க வைத்தாய்,
நெஞ்சினுள்ளே உறைந்து விட்டாய்,
நீயின்றி நான் என்பதே இல்லை!


கண்ணில் கனவில் நீயே தோன்ற,
காலம் முழுதும் என்னோடு போனாய்.
உன் சிரிப்பு என் சோகத்தை குறைக்கும்,
உன் மேல் என் நேசம் காலமெல்லாம் நிலைக்கும்.


உன்னால் தான் வாழ்க்கை இனிமை,
ஒவ்வொரு நாளும் ஒரு புது பயணம்.
உன் வார்த்தைகள் உயிர்க்கொடுத்து,

சிலந்தி வீதியில் சாமர்த்தியமாக,
சமாதானம் பேசும் காலடி ஓசை,
உன் தோளில் என் விரல்கள் சாய,
நமது காதல் நேரம் நகர்கிறது மெல்ல.

கூட நடந்த பாதை
வானம் நம்மை ஆசீர்வதிக்க,
மழை துளிகள் கூட இசையாட,
நீயும் நானும் – பேசாமலே,
பார்வையிலே காதலோசை!

அடி ஒவ்வொன்றும் ஒரு நினைவு,
சிரிப்பும் சிந்தனையும் கலந்தது.
உன் அருகில் நடந்த அந்த நிமிடம்,
என் வாழ்நாளின் சிறந்த கவிதை!


கைகளில் கை, கண்ண்களில் கனவு,
வழிகளில் பூவும், வானில் நட்சத்திரமும்,
இருவரும் மட்டும், மற்றவை மாயம்,

என் வழியின் தேடலாக இல்லாமல் என்னை வழிநடத்தும் ஜுவனாக நீயே உள்ளாய் !!!!

இக்கவிதை என் வாழ்க்கை துணைவனுக்கு சமர்ப்பிக்கின்றேன் ❣️❣️❣️❣️


« Last Edit: May 05, 2025, 07:35:52 AM by Asthika »

Offline Titus


பசுமை நிரம்பிய ஒரு அமைதியான கிராமத்தில், இயற்கையின் மடியில் நான் அமைதியாக வாழ்ந்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் நீ வந்தாய், ஒரு மென்மையான காற்றின் தொடுதலாய் என் வாழ்வில் நுழைந்தாய். மலர்கள் வாசம் கொடுக்கும் அந்த பொழுதில்

உன்னைக் கண்ட என் மனம் எதையும் எதிர்பாராமல், இயற்கையாகவே உன்னில் உருகியது. உன் அன்பு ஒரு மழைத்துளியைப் போல மெல்ல, ஆனால் ஆழமாக என் உள்ளத்தில் ஊறிக்கொண்டது.

எதிலும் அழுக்கில்லாத ஒரு தூய உணர்வாய், நீ என் வாழ்கையின் எழுத்துகளாய் மாறினாய். அந்த ஒரு நொடியிலே, என் வாழ்க்கை ‘நான்’ என்று சொல்லப்படுவதை விட்டு, ‘நாம்’ என்ற கதையாகத் துவங்கியது.

காடு சார்ந்த பாதையில் நீ வந்தாய்,
சூரியன் மறைந்த அந்த மாலையில்,
உன் கண்களில் வீசும் ஒளி
என் வாழ்வை காற்றின் போல அலைய வைத்தது.

உன் சிரிப்பின் ஒலி, ஒரு புல்வெளியில்
பட்டாம்பூச்சி ஆட்டம் போல் உண்டாகும்,
மெல்லிய காற்றின் மெல்லிய இசையாய்
என் உள்ளம் அதில் கலந்தது.

நான் உன் கைகளில் நின்று,
பசுமை நிலத்தில் அழகு தோன்றி,
என் உள்ளத்தில் எந்த வார்த்தையும்
உன் சிறு தொடுதலின் போதும் உரைந்தது.

நாங்கள் ஒன்றாகக் கனவுகளைப் பொங்க
பட்டும் பூமி காட்டு ஒளிக்குக் கவிதையாக,
உன் அருகிலேயே நான் நெஞ்சில் விழுந்து,
கிராமத்தின்மேல் காதலின் கவிதை பறக்கிறது.

உன் நினைவுகள் என் உள்ளம் பரிமாறிக் கொண்டே
பசுமை நிலத்தில் பல்லாயிரம் மலர்கள் பவனாய்
கண்களுக்குள் ஒளிர்ந்து, எப்போதும் இழுத்து
என் வாழ்வை நீ கொண்டுள்ள அதிசயமாக்கின்றன.

நாம் நடக்கும் பாதையில் சிரிக்கும் காற்றின் போல,
என் சுவாசம் உன்னுடன் சேர்ந்து புது ஓசை போல
பரிமாறும் காலகடவுளின் இசை,
பசும்புல் காடுகளின் சங்கீதம் ஆகிறது.

நம்முடைய காதல் எளிய நிலத்தில்
பூமியில் ஊரின் விழிகளில்
ஒரு கணவாய் மாறும் போதிலும்,
எந்த வருவாயும் அதை விளக்க முடியாது.

இந்த கவிதையை என் எதிர்கால வாழ்க்கை துணைக்கே
அர்ப்பணிக்கின்றேன்,♥️♥️♥️😘


       
« Last Edit: May 07, 2025, 03:26:38 PM by Titus »

Offline Thooriga

  • Sr. Member
  • *
  • Posts: 305
  • Total likes: 638
  • Karma: +0/-0
  • Gender: Female
  • இசையின் காதலி
நீ நடந்த வழி எல்லாம் பூப்பாதை ஆயிற்று,
உன் பின்னால் நான் ஒரு மழைத் துளி போல.

நீயோ வாழை இலை பிடித்து சிரிக்கும் சிறகு,
நானோ அந்த சிரிப்பை ரசிக்கும் காற்று.

வயலின் பசுமை போலே உன் விழியின் அமைதி,
உன் அருகில் வந்தாலே உலகம் மறந்துவிடுதே.

ஒரு இலைக் குடை போதும் எனக்கு,
அதுக்குள் நீ இருக்க மத்தவங்க எல்லாம் தொலைந்துவிடட்டும்.

உன் நடையைப் பார்த்தே என் கவிதை எழுகிறது,
நீ சிரிக்கும்போதுதான் என் நாளும் சிரிக்கிறது.

காதல் கதை சொல்லாமலே பேசுகிறது,
உன் பார்வை எனக்குள் புது உலகம் திறக்கிறது.

வயல் காற்றில் உன் கூந்தல் ஆட,
அதைப் பின் தொடரும் என் உயிர் தான்.

தூரம் என்றால் பயமில்லை,
நீ ஒரு முறையாவது திரும்பி பார்ப்பாயா?.
« Last Edit: May 05, 2025, 10:58:36 AM by Thooriga »

Offline Lakshya

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1041
  • Total likes: 1831
  • Karma: +0/-0
  • Dream it. Wish it. Do it ✨🦋
பசுமை புல்வெளி மேல் நம் இருவர் பாதம்,
பக்கத்தில் நீயும் பூவை போலே!!!அரசமரத்தடியில் மறைந்து பேசிய நாட்களை மறக்கமுடியுமா??

வாழை இலை கட்டிய மழை குடை வைத்து என் முன் நடந்து சென்றாய்...உன் கால் தடம் பதித்த மண்ணில் என் கால் தடம் பக்கத்தில் வைத்து ரசித்து பார்த்தேன்...

என் இதயத்தின் இசையாக மாறிய உன் கனிந்த குரல் எனக்கு என்றும் சலிக்கவில்லையே...வயலில் நனையும் ஒவ்வொரு துளியிலும்,உன் முகம் தெரியுதடா!!!

நாம் சென்ற பாதையில் பூவும் நம்மை பார்த்து ரசித்தது...மழையில் நனைந்து நீ முன்னே செல்ல, உன் முகத்தை ரசித்தவாறு நான் உன்னை பின் தொடர்ந்தேன்....

மணல்வெளியில் விழுந்த என் நிழல் கூட வாடுது உன்னை காணாமல்...நெஞ்சுக்குள் நதிபொல் ஓடும் உன் நினைவுகள்,தண்ணீர் குளங்களில் உன் முகம்...

நீ தொட்ட கொடிகளில் மலர் பூப்பது போல, நீ பேசிய வார்த்தை என் மனதில் கனவுகளாக பூத்தன...மழை பெய்யும் முன் அடிக்கும் காற்று போல,உன் வரவு தேடி மனம் புயலாக மாறியதே...

நீ சொல்லாத வார்த்தைகளில்,
ஆயிரம் கவிதை கண்டறிந்த நொடி உன்னை மீண்டும் நேசித்தேன்... மண் வாசனை போல் மலர்ந்த இந்த காதல் விரைவில் சேர ஆசைப்படுகிறதே என் இதயம்...

வழி தெரியாமல் இதயம் போனதே உன்னால்...என் கொலுசின் இசை போல நீ என்னுடன் பயணிக்க விரும்புகிறேன்...மண், காற்று, நிலா, சூரியன் சாட்சியாக நம் காதல் மாறாமல் இருக்கும் என்பதை பதிவிடுகிறேன்...
« Last Edit: May 05, 2025, 12:15:13 PM by Lakshya »

Offline KS Saravanan

பூமியில் ஒரு தேவதை..!

இயற்கை மாறா வயக்காட்டிலே
சிறகில்லா தேவதையை கண்டேன்..
அவள் நடையில் இளம்பஞ்சி பனித்துளிகள்
அவளின் பாதங்களை தொட்டு
சொர்கத்தை அடைகின்றனவோ..!

வாழையிலையை குடையாய் பிடித்தும்
அவளின் அழகில் ஆதவனும் மயங்கி 
ஒளியை அவன் குறைத்து கொண்டான் -வெட்கத்தினால்
வானமும் சிலிர்த்துக்கொண்டு 
மழை தூறலில் தன் காதல் சொன்னது..!

அவளை பின் தொடர்ந்த என் கால்கள்
வாய்க்காலில் நின்றபடி அவளின் பார்வை 
வாசகமில்லா கவிதையாய் என்னுள் உருமாறியது
அவள் நின்ற கதிர்களுக்குள் நான் கரைந்தேன்
வயலின் நிறங்களில் என் கனவுககளை வரைந்தேன்..!

அவள் புன்னகை – ஒரு சிறு கோவில் தீபம்
என் இருள் மனதுக்குள் ஒளியாக ஒளிர்ந்தாள்
அவளில் பட்டாடை காற்றில் ஆட
காலம் நின்றது – அவள் பார்வைக்குள் நான் வாழ
காலனே இனி உனக்கு ஓய்வு தான்..!

என் கண்களில் ஓரத்தில் அவள் ஒரு வானவில்
என் விழிப்பிலும் உறக்கத்திலும் வருகிறாள்
மெளனமாய் நான் பேசும் மொழி
தென்றலாய் அவளிடம் ஸ்பரிசம் கொண்டு
அவளிடம் மட்டுமே மொழிபெயர்க்கப்படுகிறது..!

அவள் திருமுகம் ஒரு சித்திரம் எனில்
என் நெஞ்சமே அதன் ஓவியக் கட்டுரை
அவளிருப்பதோ என் கவிதையின் முதற்சொல்
அவள் இல்லையேல் பூமியும் சுற்றாது
அவள் கண்பார்வையில் ஒரு மின்காந்தம்
விலக முடியாமல் அவள் பின் தொடர்கிறேன்
வயலின் இரைச்சலில் கூட சத்தமில்லாமல்
அவள் பெயரை இதய துடிப்பாய் துடிக்கிறது
வாழையிலை போல பரப்பிய என் காதல்
நிழலாய் பூமியில் ஒரு தேவதைக்காக காத்திருக்கிறது..

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1839
  • Total likes: 5683
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
இலைக்குள் ஒரு ஜோடி

இளம் இலை நனைந்தது,
இருவரும் அருகில் நின்றது.
காதல் பேச மழை வந்தது,
கைகள் தழுவ, நெஞ்சம் குளிர்ந்தது.

கண் பேச, வார்த்தை மாற,
மனம் மெதுவாய் இசைத்தது.
அவள் சிரிப்பு இசையின் ஒலி,
அவன் பார்வை தீப ஒளி.

இலை மெதுவாய் அசைந்தது,
அவர்கள் உள்ளம் கலந்தது.
ஒரே சுவாசம் போலவே,
காதல் கைகோர்த்து வளர்ந்தது

மழை நின்றும் புன்னகை தோன்ற,
இரு மனம் ஒன்று சேர்ந்தது.
இலைக்குள் இருக்கிறது இன்பம்,
இருவரும் வாழும் காதல் கனவில்.
« Last Edit: May 05, 2025, 01:53:05 PM by சாக்ரடீஸ் »

Offline Vethanisha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1440
  • Total likes: 3021
  • Karma: +0/-0
  • Silence says so much♥️ Just listen

சித்தன்ன வாசல் சித்திரமாய்
செவ்வந்தி நீ போகையிலே
இதயமும் இயங்கலடி
உன் அழகைப்  பார்க்கையிலே
 
எட்டு மேல எட்டு வச்சு
எழிலரசி நீ நடக்கையிலே
நெல் கதிரும் குழையுதடி
உன் பாத அழகினிலே

பனித்துளியும் ஆசைக்  கொண்டு 
உனை வருட வருகையிலே
இலை குடையும் தடுக்குதடி
மனசும் கொஞ்சம் நோகுதடி

இடையோடு உரசும்
கார்மேகக்   கூந்தல் கண்டு
உதட்டோடு உரசும்
கள்ளி உன் சிரிப்பைக் கண்டு
இயற்கை அழகும் நாணுதடி
உன் முன்னே தோற்குதடி

கண்டும் காணாமல் முன்னாடி
நீ போகையிலே
தொட்டும் தொடாமல்
பின்னாடி நான்  தொடர்கயிலே
உன் கோபமும் அழகுதானடி
நம் காதல் ஊடலிலே
« Last Edit: May 05, 2025, 02:51:52 PM by Vethanisha »

Offline Ashik

  • Newbie
  • *
  • Posts: 5
  • Total likes: 48
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
தீராத தனிமை ஆறாத காயம் இது தான் என் வாழ்க்கை இவளின் வருகைக்கு பின்னே அளவில்லா காதல் நிறைவான மகிழ்ச்சி என்று மாரிதான் போனதே !! மழை இல்லா பாலைவனத்தில் பெய்த அட மழையாய் என்னுள் நுழைந்தவள் பொழிந்தாள் காதல் மழையை !! நீரற்ற நிலத்தில் ஓடிய நதியை போல அன்பால் என்னை அரவணைத்து ஆறுதலை பரிசளித்தாள் !! நிலவு இல்லாத வானமாய் இருண்டு இருந்த என் இதயத்தில் முழு மதியாய் வெளிச்சத்தை பரிசத்தவள்!! காதல் என்றால் எத்தனை அழகு என்று அவளிடம் கற்று கொள்ளும் மாணவனாய் நான் மாற காதல் எனக்கு சொல்லி கொடுக்கும் ஆசானை அவள் !! அவள் இருந்த வரையில் நான் செல்லும் இடம் எல்லாம் பச்சை வெளியா மாரி தான்  போனதே !! அவளை தொடர்ந்த்து சென்றதால் அவளின் நிழலாய் நான் மாறி தான் போனேனே !! மாற்றங்கள் பல எனக்குள் கொண்டு வந்தவள் மாறாத வலியை கொடுத்து விழகி தான் போனாலே என்னை விட்டு !! என் எண்ணங்களில் மட்டும் இன்று பசுமையை அவள் இருக்க !! வாழ்நாட்கள் அனைத்தும் அவள் நினைவுகளால் கண்ணீரில் நான் கழிக்க !!  அவள் வேண்டும் என்று என்ற ஏக்கத்தில் என் இதயம் துடிக்க மீண்டும் வருவாள் என்ற நம்பிக்கையில் வாழும் பிணமாய் நான் !!