Author Topic: மன அழுத்தம்.  (Read 54 times)

Online MysteRy

மன அழுத்தம்.
« on: April 30, 2025, 10:07:34 AM »


உலகமே தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் மன அழுத்தம்
மேலும் ஒருவர் முழு நேரமும் மன அழுத்தத்தால் அவதிப்படுவதும் இல்லை.

ஒவ்வொருவருக்கும் ஒரு சூழ்நிலை காரணியால் மனஅழுத்தம் ஏற்பட்டிருக்கும்.

அதில் முக்கியமானவை

1.தனிமை

2.தன்னிடம் மனம் விட்டு பேச அல்லது சொல்வதை பொறுமையாக கேட்க ஆள் இல்லாமை.

3.சிலருக்கு பல பேர் உள்ள கூட்டத்தில் தனிமையாகவும் பதட்டம் ஆகவும் உணர்வர்.

4.தொடர் தோல்வி

5.திடீர் என ஏற்பட்ட அன்புக்குரியவர் பிரிவு

எதுவேணாலும் சரி மன அழுத்தம் தான் என உணர்ந்த இந்த நிமிடம் வெளியேற தயார் ஆகுங்கள்.

உங்கள் அம்மா அப்பா போன்ற நம்பிக்கை மிகுந்த நபரிடம் அனைத்து கவலைகளையும் கொட்டுங்கள்.

இல்லை எனில் பேப்பர் பேனா எடுங்கள் இன்று வரையான உள்ளக் கவலை எல்லாம் எழுதி கிழித்து போடுங்கள்.

புது நபராக திரும்ப வாழ்வை தொடங்குங்கள்.

ஒரு நூறு ரூபாய் நோட்டு கூட எவ்வளவு அழுக்கடைந்தாலும் ஏன் கிழிஞ்சாலும் கசங்கினாலும் அதன் மதிப்பை இழப்பதில்லை. சாதாரண நோட்டுக்கே அப்படி என்றால் உங்கள் மதிப்பை உணருங்கள்.

பாதி மனஅழுத்தம் ஹார்மோன் சமநிலை பாதிப்பால் இருக்கலாம். அதனால் சத்து உள்ள உணவை சாப்பிடுங்கள்.

தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்

உங்கள் வேலையில் கவனத்தை திருப்புங்கள்.

அந்த நொடியில் வாழப் பழகுங்கள்.

நகைச்சுவை காணொளியை காணுங்கள். வாய்விட்டு சிரித்து மன அழுத்தத்தை துரத்தி அடியுங்கள்

நல்ல பிடித்த இசை கேளுங்கள்.

பயம் பதட்டம் எல்லாருக்கும் எதாவது ஒன்றில் இருக்கும். அதனால் எதிர் கொள்ளுங்கள் வெல்லுங்கள்.