Author Topic: ஆரோக்கியம் என்றால் என்ன?  (Read 104 times)

Online MysteRy




 இந்த கேள்விக்கு பதில் மருத்துவ விஞ்ஞானத்தால் கூட கூற முடியாது... ஆனால் நோய் என்னென்ன? அதன் அறிகுறிகள் என்ன? என்று தான் கூற முடியும்..

ஆரோக்கியம் என்பது
மனிதனில் மறைந்து இருக்கிறது.. இன்னும் சொல்லப் போனால்
மறைக்கப்பட மட்டுமே சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது சமுதாயத்தால். நோய் வெளியில் இருந்து வருகிறது. எனவே அதை விவரிக்க முடியும். ஆரோக்கியம் என்பது மனிதனுக்குள் இருப்பது
அதை விவரிக்க முடியாது.

ஆரோக்கியத்தை நாம் உருவாக்க வேண்டியது இல்லை. ஆரோக்கியமே நமது இயல்பு நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று நினைத்தாலே போதும் ஆரோக்கியம் நம்மை ஆராதிக்கும். ஆனால் தாம் ஆரோக்கியமற்று இருப்பது போல இருந்தால் தான் தனக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று மனம் பழக்கத்தால் சிக்குண்டு இருக்கிறது.

தனக்கு இன்ன நோய் இருப்பது பெருமையாவும் அதை மெத்தப் படித்த மருத்துவர் கொண்ட பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது இன்னும் பெருமையாகவும் நினைப்பதே இன்றய நாகரீகமாகவும் ஒரு கலாச்சார சூழல் உருவாகிவிட்டது. முதலில் நோய் என்பது நம் எண்ணத்தால் தானே தவிர உடலால் வருவது என்பது மிக மிக குறைவே.

நாம் அனுமதித்தால் அன்றி நோய் ஒருவரை தாக்குவதிலை. நோய் என்பது முழுக்க முழுக்க மனவியல் சார்ந்த ஒன்று. ஆரோக்கியம் என்பது ஆற்றல் சார்ந்த ஒன்று. மனதிற்கு முன்பே ஆற்றல் தோன்றியது.

ஆக ஆரோக்கியம் இருப்பில் உள்ளது. நோய் இடையில் சேர்ந்தது.
இடையில் வந்ததை தூரத்தள்ளி விட்டு இருப்பில் உள்ளதைக் கொண்டு இன்புற்று இருப்போம்.