Author Topic: முருங்கைக் கீரை பொடி செய்வது எப்படி....  (Read 1124 times)

Offline MysteRy




தேவையான பொருட்கள்:::

5 கப் முருங்கை கீரை
200 கிராம் கருப்பு உளுந்து
50 கிராம் கடலைப் பருப்பு
2 டேபிள்ஸ்பூன் மல்லி
2 டேபிள்ஸ்பூன் சீரகம்
1 டேபிள் ஸ்பூன் மிளகு
8 _12 வரமிளகாய்
1 டேபிள்ஸ்பூன் கல் உப்பு
50 கிராம் காய்ந்த பூண்டு
1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள்

செய்முறை ::::

முருங்கை கீரையை சுத்தம் செய்து அலசி துணியில் பரப்பி நிழலில் உலரவிடவும் பின் வெறும் வாணலியில் மணம் வர வறுத்து எடுக்கவும்

பின் ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும் பின் வெறும் வாணலியில் உளுந்து கடலைப்பருப்பு மல்லி சீரகம் மிளகு வரமிளகாய் சேர்த்து மெல்லிய தீயில் வைத்து நன்றாக வறுத்து எடுக்கவும்

பின் உப்பு புளி பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து மிக்ஸியில் போட்டு கரகரப்பாக பொடித்து கொள்ளவும்

பின் அதனுடன் ஏற்கெனவே பொடி செய்து வைத்துள்ள முருங்கை இலையை சேர்த்து இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்

இதை சூடான சாதத்தில் இரண்டு கரண்டி பொடியை தூவி சூடான நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு கலந்து கத்தரிக்காய் உருளைக்கிழங்கு வாழைக்காய் சேனைக்கிழங்கு வறுவல் செய்து கொடுத்தா செமயா இருக்கும்

இட்லி தோசை க்கும் நன்றாக இருக்கும்

சுவையான ஆரோக்கியமான மணமான முருங்கை கீரை பொடி ரெடி.....