சந்தோசம்
சந்தோசம் என்றால் சிரிப்பு மட்டும் கிடையாது,
சில நேரம் அமைதியாக இருப்பதும் சந்தோசம்.
துக்கம் முடிந்தபின் வரும் ஓர் நிம்மதி,
அதுவும் ஒரு சந்தோசம்தான்.
தனியாக இருக்கும்போது வரும் சிந்தனைகள்,
நம்மை நம் உண்மை வழியில் நடத்தும்.
அப்போது தான் புரியும்
சந்தோசம் என்பது உடனே வரும் ஒன்றல்ல,
அதை நாமே காணும் பயணம்.
யாரோ ஒருவரின் கண்ணீரை புரிந்து கொள்வதும்,
தவறுகளை மன்னிப்பதும்,
பழைய நினைவுகளை மெதுவாக நினைத்துப் பார்ப்பதும்
இவை எல்லாம் சிறிய சந்தோசங்கள்.
சின்ன வெற்றிகள்,
பெரிய வெற்றிக்கான தொடக்கங்கள்.
அவற்றை மகிழ்ச்சியோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.
சந்தோசம் எங்கோ இல்லை,
நாம் வாழும் விதத்தில்தான் இருக்கிறது.
- சாக்கி