ஹே
நான் நேற்று
உன்னை
தொலைபேசியில் அழைத்தேன்
நீ பார்த்தீயா இல்லையானு தெரியல
ஏதோ ஒரு சோகம்
வருத்தம் என மனதை
ஆக்கிரமித்திருந்தது
உன் குரல் கேட்டால்
எப்போதும்
அதெல்லாம்
பறந்து போகுமல்லவா !
நீ
நேற்று
சீக்கிரம்
தூங்கிருப்பாய்
அல்லது
தொலைபேசி
சார்ஜ் இல்லாமல்
அணைந்து போயிருக்க கூடும்
அல்லவா !
அது ஒரு பொருட்டல்ல
நீ
என்
வாழ்வில்
தந்த
அந்த சந்தோஷ தருணங்களையும்
உன் புன்சிரிப்பையும்
எண்ணி கொண்டே
எப்படி, எப்போ
தூங்கினேன் என
எனக்கே நினைவில்லை
என்றும்
நீ தந்த
அந்த
மகிழ்வான
நினைவுகளுக்காக
நன்றி
*****JOKER****