Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
உங்கள் அனுபவம் சொல்வதென்ன..?
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: உங்கள் அனுபவம் சொல்வதென்ன..? (Read 403 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 223259
Total likes: 27869
Total likes: 27869
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
உங்கள் அனுபவம் சொல்வதென்ன..?
«
on:
April 01, 2025, 07:45:13 PM »
“25 வருஷம் முன்னாடி, அவன் பிஸினஸ்ல கஷ்டப்பட்டிருந்தப்ப அவன் கேட்காமலேயே நான் தான் அவனுக்கு பணம் கொடுத்து உதவினேன்.. இப்போது அவன் என்னை கண்டுகறதேயில்ல.. என்னத்த சொல்ல..? கலிகாலம்.."
“அவன் படிப்புக்கு நான் எவ்ளவோ உதவி செஞ்சேன்.. இப்போ பெரிய ஆளான பிறகு அவன் என்னை மதிக்கிறதில்ல…”
.இப்படி பலர் புலம்புவதைக் கேட்கலாம்.. இந்த ‘நன்றியுணர்வு’ என்ற ஒன்று இருக்கிறதே, அதற்கு ஒரு குறிப்பிட்ட Shelf-lifeதான் உண்டு.. வாழ்நாள் முழுவதும் நன்றி பாராட்டுவான் என்று எதிர்பார்த்து யாருக்கும் ஒரு உதவியை செய்வது ஏமாற்றத்திலே முடியும். காரணம்... வளர்ந்து விட்டவன், தன் அறிவாலும், உழைப்பாலும், யாருடைய உதவியுமின்றித் தானே வளர்ந்ததாக நினைப்பதையே விரும்புவான். ‘நான் ஒரு காலத்தில் யாரிடமிருந்தோ உதவி பெற வேண்டிய நிலையில் இருந்தேன்..” என்ற ஞாபகம் தனக்கு வருவதை விரும்புவதில்லை. இதனாலேயே அவன் தமக்கு உதவி செய்தவனைப் பார்ப்பதைக் கூட விரும்பாமல் விலகிப் போவான்...
உதவி செய்வதில் சில dos and donts இருக்கின்றன:
1. உங்களிடம் உதவி கேட்டால் செய்யுங்கள்; நீங்களாக போய் செய்யாதீர்கள். அப்படி செய்வதென்றால், பாயிண்ட் 2 பாருங்கள்.
2. நீங்கள் உதவி செய்வதை நீங்களே ஒரு பெரிய விஷயமாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.. உதவி பெற்றவனும் அப்படி நினைப்பான் என்பது நிச்சயமில்லை என்பதை நினைவில் வையுங்கள்.
3. ஏதோ ஒரு return எதிர்பார்த்துதான் நீங்கள் உதவி செய்கிறீர்கள் என்றால், அதை வெளிப்படையாகச் சொல்லி, அதை உடனே பெற்றுக் கொண்டு கணக்கைத் தீர்த்து விடுங்கள். உதாரணம்: பண உதவி செய்கிறீர்களா..? உதவி பெற்றவனிடமிருந்து ஒரு fair interest வாங்கிக் கொணடு விஷயத்தை மறந்து விடுங்கள். நன்றியுணர்வுக்கு limited shelf-life தான் என்பதை மறக்காதீர்கள்.
4. நீங்கள் உதவி செய்தவனிடம் நீங்கள் செய்த உதவியை அடிக்கடி ஞாபகப்படுத்தி பேசுவதோ, நடப்பதோ செய்தீர்களானால், நீங்கள் அவனின் விரோதி நம்பர் 1 ஆகி விடுவீர்கள்.. அவனுக்கு ஒரு உதவியையும் செய்யாதவனைக் கூட அவன் உங்களை விட அதிகம் மதிப்பதைக் கண்டு மனம் வெதும்புவீர்கள்...
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
உங்கள் அனுபவம் சொல்வதென்ன..?