Author Topic: கிரிஸ்ப்பி வெண்டைக்காய் ஃப்ரை செய்வது எப்படி?  (Read 2003 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226909
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


தேவையானவை:

வெண்டைக்காய் - கால் கிலோ
கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கரம்மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

செய்முறை:

வெண்டைக்காயை காம்பு நீக்கி மெல்லியத் துண்டுகளாக நறுக்கி தட்டி பரப்பிக் கொள்ளவும். எண்ணெய், சாட் மசாலாத்தூள் நீங்கலாக அனைத்தையும் சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும். எண்ணெயைக் காய வைத்து வெண்டைக்காய்களை பொரித்தெடுக்கவும். பொரித்த துண்டுகளுடன் சாட் மசாலாத்தூள் சேர்த்து சூடாகப் பரிமாறலாம். இந்த வெண்டைக்காய் கிரிஸ்பியாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மூளை வளர்ச்சிக்கு நல்லது...