Author Topic: "அண்ணா" ?!  (Read 680 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1230
  • Total likes: 4162
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
"அண்ணா" ?!
« on: March 07, 2025, 03:14:41 PM »
ஓர் அழகான
மாலை வேளை
அரட்டை அரங்கத்தில்
நுழைந்தேன்

காண்போரிடம் பேசி
நேரத்தை கடத்த
தினம் தினம் பேச
ஒருவர் பழக்கம் ஆனார்
ஏதேதோ கதைகள்
பேசி சிரிக்க
ஒரு நாள் "அண்ணா" என அழைக்க
நானும் தங்கை என அழைக்க
தொடர்ந்தது எங்கள் அரட்டை

தங்கை இல்லா
ஏங்கிய மனதுக்கு
தங்கை கிடைத்ததாய்
துள்ளியது மனது

காலம் உருண்டோட
எதிர்பாராமல்
 வந்தது
பிரிவு
அரட்டை அரங்கம் வர முடியா
பணி சுமை இருவருக்கும்

சரி பெயரை கூட
கேட்கவில்லையே என
பெயர் கேட்க பதிலாய்
மௌனம்
சரி தொலைபேசி கேட்டு
தொல்லை செய்ய மாட்டேன் என
மின் அஞ்சல் கேட்க
கிடைத்தது
பரிசாய்
மௌனம்

அப்போது தான்
இந்த மரமண்டைக்கு
உறைத்தது
அண்ணா என்று அழைத்து
பாசத்தினால் அல்ல
ஆண் பால் உள்ள
பயத்தினால் என

இதில் அவள் தவறு ஏதுமில்லை
ஆணுக்கும் பெண்ணும்
பெண்ணுக்கு ஆணும்
நண்பர்களாய் இருப்பதை
இச்சமூகம் சந்தேக கண் கொண்டே
காண்கிறது இன்னும்

இப்பொது அவள்
எங்கு இருக்கிறாளோ
என் செய்கிறாளோ
நானறியேன்
ஆனால்
என்றும்
என் நினைவுகளிலும்
என் பிரார்த்தனைகளிலும்
உனக்காய் ஓர் இடம்
உண்டு 
என் மனதில்


****JOKER****


"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "