Author Topic: 💥பேசும் நினைவுகள்💥  (Read 890 times)

Offline Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 280
  • Total likes: 1108
  • Karma: +0/-0
  • 🔥தீதும் நன்றும் பிறர்தர வாரா 🔥
    • Google
💥பேசும் நினைவுகள்💥
« on: February 21, 2025, 03:33:53 AM »
விடுதலைக்காக போராடுகிறேன் சில
நினைவுகளிலிருந்து பிழைக்க போராடுகிறேன்...
நிஜ உலக தத்தளிப்பிலிருந்து மீள
நிழல்உலகத் தெப்பத்தில் பயணிக்கிறேன்.
அதில் நினைவுகளை இழக்கின்றேன்...

புற்றரக்கனிடம் இழந்தேன் உனை
புறம் தள்ளுகிறேன் எனை.
நீ விட்டுச்சென்ற தருணத்தில் சிக்கிக்கொண்டேன்
உன் வெற்றிடத்தை நினைவுகள் நிரப்புகின்றன...

யாரிடமும் பேசாததை உன்னிடம் மட்டும் பேசியதைக்
காகிதத்தில் பேச....
கண் அருவி வார்த்தைகளுக்கு முன் பேசி விடுகிறது...

என் முதல் காதலே!
என்கரம் பற்றிய காதலே!
இறுதி மூச்சை மட்டும்
என்முன் நிறுத்தியதேனோ!

என்னுள் இருக்கும் குழந்தைதனத்தின்
அன்னை அல்லவா நீ!
நீ மட்டுமே செறிவூட்டிய எனை
தன்னந்தனி காட்டினில் விட்டதேனோ!

வார்த்தைகளால் கிழித்தெறியும்
மனிதஓநாய் மத்தியில் ..
ஆட்டுக்குட்டியானேன்.

பரந்து விரிந்த இக்கடலில்
சிறு தெப்பத்தில் பயணிக்கிறேன்

நித்திரையில் உனை காண
நிஜத்தில் கலங்குகிறேன்
நீயின்றி நான் என்றும்
சூன்யமே!!!
« Last Edit: February 22, 2025, 11:18:15 AM by Yazhini »

Offline Thooriga

  • Sr. Member
  • *
  • Posts: 306
  • Total likes: 639
  • Karma: +0/-0
  • Gender: Female
  • இசையின் காதலி
Re: 💥பேசும் நினைவுகள்💥
« Reply #1 on: February 26, 2025, 09:25:22 AM »
அருமை