Author Topic: 💥துயிலா இரவு💥  (Read 598 times)

Offline Yazhini

💥துயிலா இரவு💥
« on: February 06, 2025, 06:17:53 PM »
காற்றில் உன்னை தேடினேன்...
சுவாசத்தில் ஏனோ கலந்தாய்....
நிஜத்தில் தொடர எத்தனித்தென்
நிழலாய் தொடர்கிறாய்....
ஊடல் கொண்ட தருணமும்
கைக்கோர்த்து துயில்கொண்டவள்...
துயிலா மடந்தை ஆகினேன்...
தாயிடமிருந்து பறிக்கப்பட்ட சேய்யானேன்...
கண்ணுக்குள் வைத்து காத்தவனே...
மீண்டும் ஒருமுறை கைக்கோர்க்கலாம் என்றால் சிறிதும் சிந்தியாமல் கூறிவிடுவேன் வேண்டாமென்று...
மீண்டும் துகள்களாக விப்பமில்லை ஆதலால்...
« Last Edit: February 06, 2025, 06:19:24 PM by Yazhini »