Author Topic: 🌹Kannukullae unnai vaithen.. kannamma🌹  (Read 943 times)

Offline Jithika

🌹Kannukullae unnai vaithen.. kannamma🌹
« on: January 29, 2025, 06:16:23 PM »
பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : ராஜ்குமாா் எஸ்.எ

ஆண் : கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா நான்
கண்கள் மூட மாட்டேனடி
செல்லம்மா நான் கண்கள் மூட
மாட்டேனடி செல்லம்மா

ஆண் : அடி நீதான் என்
சந்தோசம் பூவெல்லாம்
உன் வாசம் நீ பேசும்
பேச்செல்லாம் நான்
கேட்கும் சங்கீதம் உன்
புன்னகை நான் சேமிக்கின்ற
செல்வமடி நீ இல்லையென்றால்
நானும் இங்கே ஏழையடி

ஆண் : நெடுங்காலமாய்
புழங்காமலே எனக்குள்ளே
நேசம் கிடக்கின்றதே உனை
பாா்த்ததும் உயிா் தூண்டவே
உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே
தாிசான என் நெஞ்சில் விழுந்தாயே
விதையாக நீ அன்பாய் பாா்க்கும்
பாா்வையிலே என் ஜீவன் வாழுதடி
நீ ஆதரவாக தோள் சாய்ந்தால்
என் ஆயுள் நீளுமடி

ஆண் : கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா நான்
கண்கள் மூட மாட்டேனடி
செல்லம்மா நான் கண்கள் மூட
மாட்டேனடி செல்லம்மா

ஆண் : மழை மேகமாய்
உருமாறவா உன் வாசல்
வந்து உயிா் தூவவா மனம்
வீசிடும் மலராகவா உன்
கூந்தல் மீது தினம் பூக்கவா
கண்ணாக கருத்தாக உனை
காப்பேன் உயிராக உனை
கண்டேன் கனிந்தேன் கலந்தேனே
அட உன்னுள் உறைந்தேனே
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே
உனை என்றும் மறவேனே

ஆண் : கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா நான்
கண்கள் மூட மாட்டேனடி
செல்லம்மா நான் கண்கள் மூட
மாட்டேனடி செல்லம்மா

ஆண் : அடி நீதான் என்
சந்தோசம் பூவெல்லாம்
உன் வாசம் நீ பேசும்
பேச்செல்லாம் நான்
கேட்கும் சங்கீதம் உன்
புன்னகை நான் சேமிக்கின்ற
செல்வமடி நீ இல்லையென்றால்
நானும் இங்கே ஏழையடி