Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 363  (Read 430 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 363

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline Lakshya

❤️ நீ என் அருகில் இருக்கும்போது, நேரம் வேகமாக நகர்கிறது...கடிகாரம் நின்று, நேரம் நகராமல் இருக்க வேண்டும் என்று நினைத்த மனதிற்கு தெரியவில்லை, கடைசியில் காயபடப்போவது நீ தான் என்று...

உன் கண்கள், இதழ்கள், குரல் அனைத்தும் எனக்கே சொந்தமாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறது இதயம்....

ஆசை எண்ணும் வலைக்குள் சிக்கி கொண்டேன் நான்...உன் கரங்கள் என்னை பிடித்தவாறு இருக்க ஆசை, உன் மார்பில் சாய்ந்து இதய துடிப்பை கேட்க ஆசை , காலம் முழுவதும் உன்னை பார்த்து கொண்டே இருக்க ஆசை...

உன் கண்கள் வேறொருவரை பார்ப்பதை என்னால் சகித்து கொள்ள முடியவில்லையே!!! நான் உன்னை எல்லை இல்லாமல் விரும்பியது உண்மை...

ஆனால் நீயோ என்னை விட்டு விலக நினைத்ததை மறந்து விடுமா நெஞ்சம்??? உன்னிடம் எனக்கு இருக்கும் உரிமையை உலகிற்கே தெரியப்படுத்த வேண்டும் என்று நினைத்த எனக்கு மிஞ்சியது ஏமாற்றமே...

காதல் என்ற பெயரில் வந்தாய் காலம் முழுவதும் காயம் கொடுத்து சென்றாய்...கண்களில் நீர் இதயத்தில் வலி என்ற பரிசை குடுத்தமைக்கு நன்றி...

மனதில் கனவு கோட்டைகளை கட்டினேன் , கடவுள் முடிவு செய்தது இது இல்லை என்று தெரிவதற்கு முன்னாள்....

நீ எனக்கு மட்டுமே என்று சொந்தம் கொண்டாட வேண்டிய நான், எங்கு இருந்தாலும் வாழ்க என்று வாழ்த்த வைத்தது இயற்கை....ஆசை பேராசையாக மாறியபோது , அவன் அவளை வெறுக்க தொடங்கினான்...

உன் நினைவுகள் என் மனதில் என்றும் நிறைந்திருக்கும்❤️
« Last Edit: January 19, 2025, 11:12:57 PM by Lakshya »

Offline VenMaThI



யாரிவன் என்ற கேள்விக்கு
என்னவன் என்ற பதிலாய் ...
எதுவரை என்ற வினாவிற்கு
உயிர் பிரியும் வரை என்ற விடையாய்...

மனதை கவர்ந்த கள்வனாய்
மணமுடிக்கும் மணவாளனாய்
கண்டநாள்  முதல் கைகோர்க்கக்காத்திருந்து.. உன்னை என்
கருத்தில் நிறைந்த காதலானாய் கொண்டேன்....

கண் இமைக்க மறந்து
கனவுலகில் மிதந்த நாட்கள்...
கை கோர்த்து கண்ணாளன்
மடி சாய்ந்த நொடிகள்....

நீங்கி போன நாளெல்லாம்
நினைத்து உருகிய தருணங்கள்..
நீங்காத நொடிகளுக்காய்
கனவோடு காத்திருந்த காலங்கள்....

என...
நித்தம் நித்தம் உன் நினைப்பில்
உன் அன்பின் அரவணைப்பில்
என்னையே நான் மறந்தேன்...
உன்னவள் என முழுவதுமாய் உணர்ந்தேன் ....

என் காதலாய் மட்டுமல்ல...
உயிராய் உணர்வாய் என் அனைத்துமாய் நீ
என நான் உணர்ந்த உண்மையை
உலகிற்கும் உணர்த்த முயன்றேன்...

என் காதலை உணர்த்த முயன்றது தவறா.. இல்லை
காதல் என்னவென்று அறியாதவரிடம் அதை உரைத்தது தவறா என...
எண்ணி எண்ணிப்பார்த்தும்
விடை தெரியா வினாவாய்...
கரை காணாக்கடலாய் போனது
என் எண்ணம் மட்டுமல்ல
என் காதலும் தான்....

பேசிப்பேசி களைத்த பின்னும்
பட்டினியாய் கிடந்த பின்னும்
காதலை அவர்கள் அறியலையே
என் காதலும் தான் புரியலையே...

மனதால் இணைந்த காதலை
மதத்தை கொண்டு பிரிப்பதும்
அன்பால் வளர்ந்த காதலை
அந்தஸ்த்தை கொண்டு அடக்குவதும் என

காதலை எதிர்க்க..
காதலை ஒழிக்க..
கூட்டம் பல இருக்கையிலே... என்
பெற்றோர் என்ன விதிவிலக்கா....

பெற்றோரை எதிர்க்க தெம்பில்லை
உன்னுடன் வாழ வழியில்லை
மறந்து வாழ மனமின்றி
மறித்து போக முடிவெடுத்தேன்....

மன்னிப்பாய் என்ற நம்பிக்கையுடன்
மனதார ஒரு வரம் கேட்கிறேன்
மரணத்தில் துணையாய் நீ வேண்டாம்
மறுஜென்மத்தில் உன் மகளாய் நான் வேண்டும்...

தந்தையின் சாயலாய் கண்ட உன்னை
தந்தையாகவே பெற வேண்டும்....
காலம் முழுதும் உன்னுடன் வாழும்
கனவது பலித்திடும் வாழ்வு வேண்டும்......


Online Asthika

  • உன் தோள்களில் நான் முதலில் சாயும் போது..
    கண்கள் நனைந்துபோனது..!

    கடைசி வரைக்கும் நீ நிலைக்கப் போவதில்லையே..
    என்றெனை பயமுறுத்தியது நெஞ்சு...!!
    எவ்வளவு பாரங்கள் இருந்தாலும்..

    எல்லாம் தீர்ந்து இலகுவாகிறது மனம்..

    உன் சிரிப்பிர்ற்கு முன்னால் மட்டும்...!!

    எத்தனைதான் சண்டையிட்டாலும்
    உன் சமாதானத்தின்
    கிறுக்குத்தனத்தில்
    உடைந்துவிடுகிறது
    அத்தனை கோபமும்
     
    சுகங்களை
    பகிர்ந்து கொள்ளும்
    அன்பை விட
    சோகங்களை
    பகிர்ந்து கொள்ளும்
    அன்பே உண்மையானது..
    என் அன்பை புதுபித்து கொள்வதை விட
    என் சோகங்களை
    பகிர்ந்து கொள்ளவே
    உன்னை தேடினேன்..
    என் மனதை
    நிறைத்து கொள்ளவே
    உன் அன்பை தேடினேன்
    மருந்தாய் நீ இருந்தாய்
    அன்பை பகிர்ந்து
    கொள்ள ஆயிரம் வழிகள்
    இருந்தாலும்
    அதை புரிந்து
    கொள்ள ஒரே வழி
    அன்பை பகிர்ந்தவருக்கு
    பிடித்தவனாக
    இருப்பது..
    அன்பே..!!

    உயிரோடு கலந்த
    உன்னை மறக்க,
    என் மனதிற்க்கு தெரியவில்லை..!"
    குழப்பங்கள் என் மனதில் இருந்தாலும்,
    உனக்கு எந்த வலியையும் தரவில்லை..!"

    என் உள்ளத்தில் சோகம் நிறைந்தும்,
    உன் சந்தோஷத்தை கலைக்கவுமில்லை..!"
    இதை அத்தனையும்,
    நீ உணர்ந்திருப்பாய்.!"

    உன் சம்மதம் ஒன்றுக்காக,
    நான் படும் வேதனைகளை
    யாரிடம் சொல்ல..!"
    தனிமையில் வாடிய
    என் மீது,
    அளவற்ற பாசத்தை காட்டி,
    ஏன் விலகி செல்லுகிறாய்..?

    நிரந்தரமில்லாத உறவுகளுக்காய்,
    உண்மையான நம் காதலை,
    ஏன் புறக்கணிக்கிறாய்..!"

    என் உயிரே..!!

    நான் மறு ஜென்மமும்
    உன்னோடு வாழ்வதா?
    இல்லை,
    மறுகணமே
    மரணிப்பதா?
    உன் பதிளில் தான்டா
    என் வாழ்க்கையே உள்ளதடா
    என் கண்மணியே...!!
    காதலில் கவிதைகள் பல உண்டு..

    அந்த கவிதைகள் மேல் எனக்கு கொஞ்சம் காதலும் உண்டு..

    அந்த காதலை மிஞ்சும்..
    என் மேல் காதல் கொண்ட..

    ஓர் அழகிய கவிதையும் எனக்குண்டு..
    உன் உருவில்...
    நீயும்" வேண்டும் என்று ஆரம்பித்தது நம் உறவு..

    "நீ" வேண்டும் என்று அது தொடர்ந்தது..

    இன்று..

    "நீ மட்டும் " வேண்டும் என்று முடிவிற்கே வந்து விட்டேன்...

    ‌ காத்திருகிறேன் உன் தாயாக நான் உன்னை அரவணைத்துக்கொள்ள❤️❤️❤️
       
       

Offline Ramesh GR

காதல் ❤️❤️❤️

பள்ளியில் தொடங்கி கல்லூரியில் முடியும் பாலுணர்ச்சி அல்ல

கண்ணில் தொடங்கி மரணம் தாண்டியும் வாழும் உணர்வு தான் காதல்

முதன் முதலில் என் கண்ணில் கண்ட பூஞ்சோலை
என்னவள் செவ்விதலில் வரும் ஒரு ஒரு சொல்லும் அமிர்தம்
அவளின் தீண்டல் என் வாழ்வின் மோட்சம்

என் காதலை ஏற்கும் போது அவளே என் உலகம்

என்னவளோடு இருந்த ஒரு ஒரு நொடியும் சொர்கம்

அவள் பிரிந்த இரவு என்னவோ நாகராமல் நின்றது

பகல் முழுவதும் பேசினோம் ஆனாலும் அவள் அருகில் இல்லை என்ற எண்ணம் ஏதோ என்னை வெறுமை ஆக்கியது

உறக்கமாற்ற இந்த பிரேதத்திற்கு தொலைபேசியில் உயிர் தந்தால் என் தேவதை

அப்படியே காலம் உருண்டது அன்பும் அதிகம் ஆனது,

காலம் செல்ல செல்ல அன்பு குறையும் என்பார்கள் இந்த காதலில் மட்டும் தான் காலம் செல்ல செல்ல அன்பு அதிகம் ஆகும்


என் காதலி மனைவியாகினால் அது ஊருக்கு மட்டும் எனக்கு என்றும் என் அழகு தேவதையே

என் குழந்தைக்கு தாயானால் அது மற்றவர் கண்களுக்கு மட்டுமே
எனக்கு நான் தான் அவள் முதல் குழந்தை அந்த இடத்தை யாருக்கு தர மாட்டேன் 😂

எனக்காக இல்லாமல் என் பெற்றோரை கவனிக்கும் அவள் அரவணைப்பு என்னை அடிமையாக்கியது

சிலர் கூறுவர் பொண்டாட்டி தாசன் என்று அந்த மடமைகளுக்கு புரியாது என்னவளின் அன்பு

எனக்காக உள்ள ஒரு உயிர்
எனக்காக எதையும் செய்யும் ஒரே உயிர்
அவளுக்காக என் உயிரையும் கொடுக்க துணியும் அன்பு காதல்

அவளே என் இறுதி மூச்சு என்று அவள் பிரிகிறளோ அதுவே என் இறுதி நிமிடமாக மாறும்

நாங்கள் இறந்தோம்...... உங்களுக்கு ஆனால்

எங்கள் காதல் தொடரும் சொர்க்கத்தில் ❤️❤️❤️

« Last Edit: January 21, 2025, 03:15:12 PM by Ramesh GR »

Offline RajKumar

காதல்

கண் இமைக்கும் நொடி பொழுதும் கூட
உன் நினைவுகள் என் மனதை விட்டு விலகாது என் கண் விழியே

கண் விழியை இமை காப்பது போல்
கண்ணுக்குள் உன்னை வைத்து பார்த்துக் கொள்வேன் காதலியே
கனவிலும் உன்னை விட்டு பிரிய மாட்டேன் அன்பே

அன்பு காட்டுவதில் அமுத ஊற்றாய்
இருக்கும் என் இதயமே
பாற்கடலில் உள்ள அமுதத்தை போன்று குறைவில்லாமல் அன்பை
உன் இதயத்தில் இருந்து தருவாளே
உனக்கு நிகர் எவர் உண்டு அன்பு காட்டுவதில்
இன்பத்தில் மட்டுமில்லாமல் துன்பத்திலும் துணைநிற்கும் உன் உண்மையான அன்பு
கண்ணால் பேசுகிறாய்
இதய மொழியாய் அன்பை
பாரிமாறுகிறோம் இருவரும்
அன்பு காதலியே
உண்மையான அன்பால் அனந்தமடைகிறேன்
உன் உள்ளப்பாசத்தால்  பரவசமடைகிறேன்

வானவில்யாய் என் வாழ்வில் வந்து
வாண்ஜாலத்தை கொடுக்கிறாய்
நட்சத்திரங்கள் அனைத்தும் இணைந்தாலும் உன் நிலா முகத்திற்கு இணை இல்லை

உன்னை பார்த்த நாளில் மொட்டாய் இருந்த உன் அன்பு
அரும்பாய் மலர்ந்து
காதல் ரோஜவாய் இன்று
என் மனத்தில் இருக்கிறாய்

நான் கேட்காமல் என் வாழ்வில் கிடைத்த வரம் நீ
இப்பொழுது வரமாய் கேட்கிறேன்
என்றும் பிரியாத வாழ்வு வேண்டும் என்று
 என் வாழ்வை வசந்தம் ஆக்க வந்த
 பாச மலரே
 என் கண் விழியே
என் அன்பு காதலியே
என்றும்  ஏன்றும் பிரிய மாட்டேன்
உன்னை விட்டு
வாழ் நாள் முழுவதும் பாசத்துடன்
 இணைந்து இருப்போம்





Offline PreaM

அருகில் இருப்பது எவனோ இல்லை
என் மனதைக் கவர்ந்த கள்வனே
என் நினைவில் நிற்கும் மன்மதனே
மனதை மயக்கும் என் காதலனே
வழி துணையாய் வருவது எனக்காக
என் பயணம் இருக்கும் சிறப்பாக
பூமியைச் சுற்றும் நிலவைப் போல
பெண் நிலவை சுற்றும் சூரியனே
என் வாழ்வொளி வீச வந்தவனே
நிழலாக நீயிருக்க நிம்மதியாய் நானிருக்க
வீசும் தென்றல் காற்றோடு கலந்து
என் சுவாசமடையும் உன் வாசம்
உன் முகம் பார்த்தே மயங்குகிறேன்
மார்பினில் சாய்ந்திட ஏங்குகிறேன்
ஏக்கம் கொண்ட பெண்ணின் உள்ளம்
பேருந்தின் உள்ளே என்ன செய்யும்

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1173
  • Total likes: 3205
  • Total likes: 3205
  • Karma: +0/-1
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதருக்கு அழகு !

பேருந்து மக்கள் பிரயாணிகளின்
பெரும் இரைச்சலுக்கு நடுவில்
உன் மௌனம்
என் செவிகளை பிளக்க செய்கிறது

ம்ம்
என்று சொல் போதும்
உன் மீது அன்பு கொள்ள

ம்ம் என்று சொல் போதும்
உன்னை என் அன்பு கொல்ல (murder)

என்றும் முடியாத கனவு நீ
என்றும் முடியாத மயக்கம் நீ
என்றும் முடியாத தூக்கம் நீ
என்றும் முடியாத இரவு நீ
என்றும் முடியாத காதல் நீ

அகம் தேடும் பொழுதில்
உறவாய் வந்தாய்
உணர்வாய் கலந்தாய்
உறங்காத என் இதயத்தில்
உறங்க தவிக்கும் உன் நேசம்

அன்றை விட
இன்று நம் காதல் அழகு
அன்றை விட
இன்று நாம் இருவரும்
இருந்த நாட்கள் ஆழம்

நம் பயணம்
அனைத்தும் இன்று
வெறும் நினைவுகள் ஆகின

சராசரி பெண்ணைப் போல்
நீ பழகி இருந்தால்
நீ காதலித்து இருந்தால்
கடந்து சென்று இருப்பேன்
நீ இறந்த பின்பும்
உன்னிடத்தை நிரப்பவே முடியாத அளவிற்கு அன்பை என்னில்
விதைத்து சென்று விட்டாய்

எழுந்து வா அன்பே !
உன் வாசம் முகர்ந்து
உன்னோடு வாழ வேண்டும்
ஆசை தீர காதல் செய்ய வேண்டும்
எழுந்து வா !

« Last Edit: January 23, 2025, 01:09:57 PM by சாக்ரடீஸ் »

Offline Kavii

என்னவனுக்காக !

காதலே வேண்டாம் என நினைத்தேன்!
உன்னை பார்த்ததும் காதல் கொண்டேன்,
ஏன் என்று எனக்குத் தெரியவில்லை,
இது தான் இறைவனின் சதியோ !

எங்கிருந்தோ வந்தாய் !
என்ன உள்ளத்தை கொள்ளை கொண்டாய்!
என் உயிருக்குள் உயிர் ஆனாய் !
எல்லாவற்றையும் விட உன்னதம் ஆனாய் !

உன்னால் உலகம் மறந்தேன் !
சுற்றம் மறந்தேன் !
என்னை மறந்தேன் !
எல்லாம் மறந்தேன் !

எனக்காக துடிக்கிற நீ என் பக்கத்தில் !
உனக்காக என்னைத் துடிக்க விடவில்லை என் சொந்தங்கள் !
உன்னை விட்டு வாழ்வதற்கு எனக்கு சக்தி இல்லை !
உன்னை விட்டு விலகி செல்கிறேன் உனக்காக !

அன்பின் உருவம் நீ ! எனக்காக எதையும் செய்யும் ஜீவனும் நீ!
எனக்குள் நீ எப்போதும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாய்  !
என்னுள் துடிக்கும் உன் இதயம் சொல்லும் நம் காதல் கதையை !
உன்னோடு தினமும் பயணித்த பேருந்து சொல்லும் நான் சொல்ல மறந்த மிச்ச கதையை !

நீ நிம்மதியாக வாழ நான் சுமக்க தயாராகிவிட்டேன் நம் நினைவுகளை மட்டும் !
அழகான தருணங்களில் துளிர்த்த உன் புன்னகை
என் இதயத் துடிப்பாக ஒலித்துக்கொண்டிருக்கிறது .
சிக்கலான சில தருணங்களில் உன் மௌனத்தின் மொழி நான் புரிந்துகொண்டபோது என் நரம்புகளை சிலிர்க்க வைத்தது !
எத்துணை பக்குவம் உனக்கு!

இனி நான் காட்டும் மௌனம் உனக்கு புரியுமோ புரியாதோ
விதி வகுத்த பாதையில் செல்கிறேன் இன்று!!
நான் மட்டும் தனியாக !
உன் நினைவுகள் மட்டும் என்றும் எனக்கு துணையாக !

எது வேண்டும் என்று மனம் அடம் பிடித்ததோ
அதையே வேண்டாம் என்று சொல்ல வைக்கிறது விதி !
நிம்மதியாக நீ  நீண்ட காலம் வாழ வேண்டும் ! என சொல்கிறது அறிவு !
அவனை விட்டு எப்படி இருப்பாய் என கேட்கிறது மனது !
யதார்த்தம் உணர்ந்து அறிவின் பாதையில் செல்ல துணிந்து விட்டேன் !

எத்துணை தூரம் போவாய் என்று எனக்கு தெரியாது! ஆனால்
நீ என்னோடு அருகில் இருந்தாய் என்கிற நினைவுகள் போதும் !
இந்த மண்ணில் நான் உயிர் வாழ !
உன்னை பிரிந்தாலும் உன் நினைவுகளே என் உயிர்மூச்சு!
« Last Edit: January 23, 2025, 10:39:59 PM by Kavii »