கனவாய் போன காதல் !
கையில் மலர்ச்செண்டு, மனதில் பூந்தோட்டமாய் அவள் மீதான காதல்!
அவளுக்காக காத்திருந்தேன், நெஞ்சம் கனவுகளால் நிறைந்திருந்தது!
அவள் வந்து என்னை எட்டிப் பார்க்க, என் மனம் பரவசமாயிற்று,!
ஆனால் அது நொடியில் நொறுங்கி, சோகத்தின் ஆழத்தில் விழுந்தது!
அவளின் பார்வை என் இதயத்தைத் தேடுமென நம்பினேன்!
ஆனால் அவளோ வேறு ஒருவனின் கையை பிடித்து நடந்து சென்றாள்!
என் கண்களிலிலிருந்து கண்ணீர் மலர்கள் போலச் சிதற,
என் காதல் கனவுகள் பொய்யானது, என் இதயமும்
சில்லு சில்லாய் நொறுங்கி போனது !
அவள் சிரித்து கொண்டே என்னை கடந்து அவனுடன் சென்றாள் !
காற்று கூட எனக்கு ஆறுதல் சொல்லாமல் அவள் பின்னால் சென்றது!
பூத்திருந்த பூக்கள் என் கையில் வாடியதைப்போல
அவளுக்காக காத்திருந்த என் நெஞ்சும் வாடியது!
நினைவுகள் கண்ணீரில் ததும்ப, வார்த்தைகள் மௌனமாய் உறைந்தன,
என் இதயம் நிகழ்ந்ததை ஜீரணிக்க முடியாமல் வெதும்பியது .
அவள் ஒருவனின் பக்கம் மகிழ்வோடு நடந்தாள்,
நான் இங்கு இருளில் மூழ்கி, என் வாழ்வே ஒளியிழந்தது !
அவளின் நினைவுகள் மட்டும் என் மனதை பிழிந்தது!
அவள் மீதான என்ன காதலும் என்னைப் போலவே மெல்ல அழிந்தது!
கனவுகள் கரைந்து விட்டன, அவள் முகம் நிழலாய் மாற,
அவள் சிரிப்பு எனக்குள் சோகத்தை விதைத்தது,!
இங்கே நான் மட்டும் காலத்தின் வெற்றிடத்தில் நின்றேன்,
மலர்ச்செண்டு கையில் இருந்தது, ஆனால் அதில் வாசமும் இல்லை என்னில் சுவாசமும் இல்லை.
இரவில் சிதைந்த நிழல்கள் போல்,
இன்றும் என் நெஞ்சில் காயமாய் அவள் நினைவுகள் !
அவள் பாதம் பதிந்த இடத்தில்!
தொலைந்து போனது என் காதல் கனவுகள் !
காத்திருந்த காதல் கனவாய் போனது!