என் அன்பு சகோதரி ரித்திகா
உங்களுக்கு என் பிறந்த நாள்
நல்வாழ்த்துக்கள்
என் அன்பு நண்பி நட்சத்திரா
உங்களுக்கும் என் பிறந்த நாள்
நல்வாழ்த்துக்கள்
சிலரிடம் பேசுகையிலும்
பழகும் நேரத்திலும்
பல நாட்கள் பரஸ்பரம் பழகிய
பரிச்சயம் கிட்டும்
காரணம் சிந்திக்கையில்
ஏதும் இருக்காது
ஆனால்
நம் சந்தோஷத்திற்கான
காரணமாய் அவர் இருப்பர்
நமக்காய் நேரம் ஒதுக்குவார்
நமக்காய் சிரத்தையாய்
நம் மகிழ்ச்சிக்காய்
சில விஷயங்களை செய்வர்
விலகி நின்றாலும்
நினைத்து பார்க்க
நினைவுகளில்
மகிழ்ச்சியான தருணத்தை
தந்திருப்பார்
என்றும் என் நினைவுகளிலும்
என் பிரார்தனைகளிலும்
நீங்கள் இருப்பீர்கள்
GOD BLESS YOU RITHIKA & NATCHATHIRA
பிறந்தநாள் வாழ்த்து
******************
சற்று விசித்திரமானது தான்
நம் மனம் சில நேரம்
சதா சர்வகாலமும்
நம் நினைவில் இருப்பவர்களின்
பிறந்தநாளை கூட
நினைவில் வைத்து கொள்ளாது
என் பிறந்தநாளுக்கு வாழ்த்து
சொல்லவே இல்லை
என்ன நண்பன் நீ !?
என்ன சகோதரன் நீ ?!
என்ன காதலன் நீ ?!
என்று செல்லமாய் உரிமையாய்
கேட்கும் கேள்விக்கு சில நேரம்
பதிலில்லை
இது வயதாகிவிட்டதன் குறியீடா ?
பிறந்தாளுக்கு
புது துணி எடுத்து தருவாரா அப்பா அம்மா ?–
என்று காத்திருந்து
அதை பள்ளிக்கு அணிந்து செல்ல
காண்பவர் எல்லாம்
என்னடா பிறந்தநாளா?
என வினவி , வாழ்த்தி
மாலையில் கேக் வெட்டி , நண்பர்கள் உறவுகள் என
பரிசுகள் பெற்று அடுத்த ஒரு வருடம்
அந்நினைவில் கடத்திய காலம் ஒன்று உண்டு
வாழ்வில்
வயது ஏற ஏற ஆசைகள் குறைய துடங்கின
வயதை மறப்பதற்கேனும் கொண்டாடாமல்
இருந்துவிடலாம் என எண்ணம்
தோன்றும்
சற்று விசித்திரமானது தான்
நம் மனம் சில நேரம்
************
****JOKER****