Author Topic: அரட்டை அரங்கம் !  (Read 1797 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1212
  • Total likes: 4111
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
அரட்டை அரங்கம் !
« on: August 31, 2024, 08:54:14 PM »
முதல் நாள்
தயக்கத்துடன் தான்
எட்டி பார்த்தேன் எனினும்
ஈர்த்து விட்டது என்னை
தன் வளையத்தினுள்

பொழுது போகாமல் தான்
உள்  நுழைந்தேன் அன்று
பொழுது விடிந்தால்
வர தோன்றுகிறது இங்கு

புதியவன் என்ற எண்ணம்
யார் மனதிலும்
இருப்பதாய் நான் அறியவில்லை
நட்பாய் இருக்க
பல காலம்
பழகிய அனுபவம்
தேவையுமில்லை

அண்ணா என்றும்
தம்பி என்றும்
நண்பா என்றும்
மச்சி என்றும்
உறவுகள் தேனீக்கள் போல
என்னை சுற்றி வளைத்தது

இவ்வுறவுகள்
தேன் போல இனித்திடுமோ
இல்லை தேனீக்கள் போல
காயப்படுத்திடுமோ என்று
தயங்கி நிற்க

திசைக்கு ஒன்றாய்
ஒவ்வொன்றும்
பறந்து சென்றன

இரவில்
சுற்றிலும் மின்னிய
நட்சத்திரங்கள்
காலையில்
கண்ணுக்கு புலப்படாதது போல

இருக்கின்றன
உறவுகள்
ஆனால் இல்லை என
ஓர் மாய வலை

வண்ணங்களை
விட்டு சென்ற வண்ணத்துப்பூச்சி போல
பசுமையான நினைவுகள்
என்றும்
மனதில் நிற்க

பறந்து சென்ற
அல்லது
மறந்து சென்ற
காரணம் என்ன என
சிந்தனையில் நான்

இது யார் மீதும் குற்றம்
சொல்லும் குற்றப்பத்திரிகை அல்ல
தன்நிலை அறிய முற்படும்
மூடனின் சிந்தனை என கொள்க


*****JOKER*****

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Vethanisha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1436
  • Total likes: 3008
  • Karma: +0/-0
  • Silence says so much♥️ Just listen
Re: அரட்டை அரங்கம் !
« Reply #1 on: September 01, 2024, 08:04:57 PM »
சிந்திப்பவர் மூடர் அல்ல நண்பரே
😅சிந்தனையாளர்


சில  பிரிவுகள் நம்மை
 நமக்கு அடையாளம் காட்டும்
சில பிரிவுகள் புது பாதை
அமைத்து தரும்
உணர்ந்த பின் தெளிந்த பின்
எல்லாம் கை கூடும்
மீண்டும் அரங்கம் கலை கட்டும்

😇😇😇