Author Topic: வந்து செல்பவர்கள்  (Read 1189 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1223
  • Total likes: 4148
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
வந்து செல்பவர்கள்
« on: July 22, 2024, 08:22:19 PM »
வந்து செல்பவர்கள்

மழை போல
நம் வாழ்வில்
அவ்வப்போது
வந்து செல்பவர்கள்

நினைவில் கொள்ள
கொஞ்சம் குளிராக,
கொஞ்சம் இதமான
நினைவுகளை
கொடுத்தவர்கள்

வார்த்தைகள்,
பார்வைகள்,
மௌனங்கள்,
சிரிப்புகள்,
அழுகைகள் என
அனைத்தையும் தந்து
திரும்புவார்கள்

உணர்ச்சிமிக்க
காதல் விதைகளை
விதைத்து முளைத்து வரும்
வேளையில் அதை
பறித்து சிரித்தபடி
செல்பவர்கள்

உறவுகள் என்னும்
கடலில் உங்களை
மூழ்க செய்து -பின்பு
வெப்பத்தின் பாதையில்
வீசி செல்பவர்கள்

நீங்களும்
கடந்திருப்பீர்கள்
அவர்களை
உங்கள் வாழ்வில்

நம் காதல்
அழிந்தால்
உலகம் அழிந்துவிடும்
என நப்பாசை கொண்ட
மனம்

அறிந்திலேன்
உலகில்
ஒவ்வொரு நொடியும்
இன்னுமொரு காதல்
பூத்துக்கொண்டிருக்கும் என



****JOKER****

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Vethanisha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1443
  • Total likes: 3055
  • Karma: +0/-0
  • Silence says so much♥️ Just listen
Re: வந்து செல்பவர்கள்
« Reply #1 on: July 23, 2024, 06:39:24 AM »
Arumai nanbare...