Author Topic: மீகாமன்  (Read 844 times)

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 787
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
மீகாமன்
« on: July 17, 2024, 01:56:00 PM »
அலையடிக்கும் கடலினிலே
மரக்கலனில் பரிதவிக்கும்
மனிதர்களின் வாழ்வதையே
கேட்கிற கண் நீர்வடிக்கும்
எல்லோரும் இவ்வுலகில்
வாழ்வதற்கே உழைக்கின்றார்
எந்நாளும் தேவைகளை
பூர்த்தி செய்ய பிழைக்கின்றார்
ஆனாலும் மீனவர் போல்
கஷ்டமதை அனுபவிக்கும்
மனிதர்தான் யாருமில்லை
என்பதுவே மெய்யிங்கே
பிழைப்புக்கு தொழில் செய்யும்
பிறர் போல அல்லாமல்
உயிர் போகும் நிலையில்தான்
ஓர் பிழைப்பு தினம் காணும்
அவர் நிலையும் இம்மண்ணில்
நீங்காத ரணம்தானே

துடுப்பிரண்டை கை ஏந்த
மரப்படகும் தான் நீந்த
மனமெல்லாம் வலியுடனே
படகின் மேல் அவன் நீந்த
குடும்பத்தின் நினைவுகளை
எதிர்கால கனவுகளை
சுமந்தேதான் செல்கின்றான்
கடலிடமே கையேந்த

சுவாசிக்கும் காற்றெல்லாம்
உப்பாகி கரித்திருக்க
அவன் போகும் கடலும் தான்
அலையாகி துடிச்சிருக்க
அதை மீறி அவன் சென்றே
கொண்டு வரும் மீனில் தான்
தன் குடும்பம் எல்லாமே
தரமாக வாழ வைப்பான்

கடலோர வெயினிலிலே
கருவாடு காய்ந்திருக்கும்
அது போல சில நேரம்
கடலினுள் அவன் காய்ந்திருப்பான்
இரவு பகல் நேரமெல்லாம்
கடக்குள் அவன் தொலைத்திருப்பான்
உணர்வோடு கலந்து விட்ட
கடலோடு பழகி அவன்
சில நேரம் அக்கடலில்
அவன்தானே உயிர் துறப்பான்
வலி நிறைந்த வாழ்க்கையிலும்
வலி தெரிய கடலினுள்ளே
வாழ்க்கைக்கு வழி தேடி
வழியற்று போகின்றான்
அப்படித்தான் உழைக்கின்ற
உயிர் கொண்ட ஜீவன் அவன்
அவன் பெயராய் நம் தமிழும்
சொல்கிறதே மீகாமன்❤️❤️
« Last Edit: July 17, 2024, 02:00:40 PM by Mr.BeaN »
intha post sutathu ila en manasai thottathu..... bean