ஓர் மாலை வேளையில்
வீட்டின் முற்றத்தில்
தனியாக யாரோ விட்டு
சென்றாரோ அவனை
பிறந்து
சில மாதம் தான்
ஆயிருக்கும்
அம்மாவை கூப்பிட்டு
காண்பித்தேன்
வாரி எடுத்தாள்
ஆசையோடு பால் ஊற்றி
குடிக்க குடுத்தாள்
செல்ல பெயரும் வைத்தோம்
இன்னொரு பிள்ளை என
அம்மாவும் ,
விளையாட ஓர் துணை
என நானும் அன்பை
வாரி கொடுத்தோம்
பள்ளி முடிந்து
தெருமுனையில்
என்னை கண்டால் போதும்
ஓடி வருவான்
அம்மாவும் அவன் இல்லாமல்
வெளியில் செல்வதை
தவிர்த்தாள்
வளர வளர
ஊர்காரர்களுக்கு
அவன் மூர்க்கன்
எங்களுக்கோ
அவன் அன்பானவன்
எங்களை காப்பவன்
ஏனோ ஓர் நாள்
நோயுற்றான்
மருத்துவர்கள்
அவனுக்கு
நோய் இருப்பதாகவும்
சில நாட்களில்
இறந்து விடுவான் எனவும்
சொல்ல கேட்டு என்
தாய் மயக்கமுற்றாள்
பிரிந்தான்
ஓர் நாள்
எங்களை விட்டு
ஆனால்
ரேஷன் கார்டில்
அவன் பெயர் இல்லை
இருந்தும்
என்றும் எங்கள்
நினைவுகளில் அவன்
எங்கள் வீட்டுக்கு
வழி கேட்பவர்களுக்கு
ஓர் மக்கள் சொல்லும் அடையாளம்
அந்த வெள்ளை நாய் இருந்த
வீடு தானே ?
அவர்கள் மனதிலும்
அழியாத நினைவுகளுடன்
அவன் வாழ்க்கை
அமைந்ததில் மகிழ்ச்சி
****JOKER****