Author Topic: என் வாழ்க்கை  (Read 918 times)

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 787
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
என் வாழ்க்கை
« on: July 02, 2024, 05:51:40 PM »
பெட்டி பாம்பெனவே
கட்டுக்குள் நின்றேதான்
சுற்றி சுற்றி வந்து
சுற்றமென எண்ணாமல்
மற்றவர் மனமதைத்தான்
மதியா ஓர் நிலையில்
துன்பம் நேர்கையிலோ
விதியை நொந்துகொண்டு
எப்படியும் வாழ்ந்திடுவேன்
என்றே எண்ணிக்கொண்டு
எல்லாம் முடிந்ததென்று
ஏக்கமும் கொண்டேதான்
யாவர்க்கும் துன்பம் தரும்
ஒரு வாழ்வை எந்நாளும்
கனவில் கூடத்தான்
நான் வாழ மாட்டேனே..
intha post sutathu ila en manasai thottathu..... bean