Author Topic: ❤️❤️ மனசாட்சியே ❤️❤️  (Read 750 times)

Offline VenMaThI

❤️❤️ மனசாட்சியே ❤️❤️
« on: June 20, 2024, 11:53:37 PM »


ஏ மனசாட்சியே

நிம்மதியா என கொஞ்சம்
பொழப்பத்தான் பாக்க விடு
தயவுசெஞ்சு நீ கொஞ்சம் பேசாதிரு ....

ரோட்டுல தான் என்ன கொஞ்சம்
பாதுகாப்பா நடக்க விடு
தயவுசெஞ்சு நீ கொஞ்சம் பேசாதிரு....

தனிமையிலும் தான் கொஞ்சம்
இயற்கைய தான் ரசிக்க விடு
தயவுசெஞ்சு நீ கொஞ்சம் பேசாதிரு ....

பசிக்கும் நேரம் என்னக் கொஞ்சம்
பொறை ஏறாம புசிக்க விடு
தயவுசெஞ்சு நீ கொஞ்சம் பேசாதிரு ....

இரவிலாச்சும் என்னக் கொஞ்சம்
இம்சை இல்லாம தூங்க விடு
தயவுசெஞ்சு நீ கொஞ்சம் பேசாதிரு...

இப்படியே என்னை வாட்டினா
இவ்வுலகத்த விட்டும் போயிடுவேன்
கல்லறையிலாச்சும் நீ கொஞ்சம் பேசாதிருப்பாயா?????....