அன்பில் வந்த ராகமே 
அன்னை தந்த கீதமே 
என்றும் உன்னை பாடுவேன் 
மனதில் இன்ப தேனும் ஊறும்!
உங்களை பற்றி கவிதை எழுத தமிழில் 
சொற்களை தேடி தேடி தோற்று போனேன்…
அதனால் தான் 
நீங்கள் பாடிய பாடலால் 
இக்கவிதையை தொடங்கி உள்ளேன்…
இயற்கை தந்த 
அற்புத கலைஞன் நீ!
இன்னிசையையும் இன்பம்
காண வைத்தவன் நீ! 
மெல்லிசையையும் மனம் 
மயங்க வைத்தவன் நீ!
பாடல் கேட்டால் 
தூக்கம் வருமா?
நிலவு தூங்கும் நேரம் 
நினைவு தூங்கிடாது  என்று
இவர் பாடினால் அன்னையின் தாலாட்டாய் இருக்கும்!!
பாடல் கேட்டால் 
உத்வேகம் வருமா?
உன் கையை நம்பி உயர்ந்திட பாரு 
உனக்கென எழுது ஒரு வரலாறு  என்று 
இவர் பாடினால் துவண்ட மனமும் புத்துணர்வு பெறும்!! 
பாடல் கேட்டால் 
காதலின் பிரிவை உணர முடியுமா?
மின்னலே நீ வந்ததென்னடி 
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி என்று 
இவர் பாடினால் காதல் கண்முன் நிற்கும்!! 
பாடல் கேட்டால் 
வீரம் தோன்றுமா?
கப்பல் ஏறி போயாச்சு 
சுத்தமான ஊராச்சு  என்று 
இவர் பாடினால் நாடி நரம்பு புடைக்கும்!! 
பாடல் கேட்டால் 
நகைச்சுவை உணருமா?
என்னமா கண்ணு சௌக்கியமா 
ஆமாமா கண்ணு சௌக்யம்தான் என்று 
இவர் பாடினால் முகத்தில் சிரிப்பு மலரும்!!
பாடல் கேட்டால் 
உற்சாகம் பொங்குமா?
எங்கேயும் எப்போதும்  
சங்கீதம் சந்தோஷம்  என்று
இவர் பாடினால் மகிழ்ச்சி பன்மடங்காகும்!! 
பாடல் கேட்டால் 
அழுகை வருமா?
உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் 
தங்கமே ஞான தங்கமே என்று 
இவர் பாடினால் கண்ணீர் பொழியும்!!
High Pitchலும் 
பாசம், காதல், கொஞ்சல், சிணுங்கல்,
காமம், சோகம்,அழுகை,பிரிவு, வலி என  
அனைத்து உணர்ச்சிகளையும் பிசிறுத்தட்டாமல் 
பாடும் ஒரு  Perfectionist தான் 
பாடும் நிலா “SPB”
நீங்கள் வாழ்ந்த காலத்தில் 
நாங்களும் வாழ்ந்தோம் என்ற 
ஒற்றை பெருமை போதும்!
ஆரம்பத்தை போல் முடிவும் 
நீர் பாடிய பாடல் வரிகளில் முடிக்கிறேன்!!
இசையின் ஆதியும் அந்தமாய் என்றும்…
இந்த தேகம் மறைந்தாலும் இசையால் மலர்வேன்!!!