Author Topic: புன்னகை..  (Read 548 times)

Offline Mr.BeaN

புன்னகை..
« on: November 20, 2023, 10:42:57 AM »


தாய் மார்பில் பால் சுரக்க,
மடி அமர்ந்து பாலருந்தும்,
சிறு குழந்தை பசி ஆறி,
சமிக்ஞை தரும் புன்னகையில்!

பள்ளி கூடம் போகும் பிள்ளை
பாடாமதை படிக்கிறப்போ
புரிந்ததாக தலையசைத்து
அழகாக புன்னகைக்கும் !

படிச்சு முடிச்ச உடன்
வேலை ஒன்னு கிடைச்சிச்சின்னா
மனசில் மகிழ்ச்சி வர
முகமெல்லாம் புன்னகையே..

பொண்ணோ மாப்பிள்ளையோ
கல்யாண பேச்செடுத்தா
கனவு காணும் மனம்
வெட்கத்தில் புன்னகைக்கும்.

திருமணம் நடக்குறப்போ
எதிர் கால துணை கண்டு
இன்பம் பொங்கி வர
எட்டி பார்க்கும் புன்னகையே!

குழந்தை ஈன்றெடுக்க
கொடுமை வலி கொண்டாலும்
குழந்தையை பார்த்த பின்னர்
தாயுமே புன்னகைப்பால்!

அந்த குழந்தையை தன் ,
கையில் வாங்கி பார்க்கையிலே,
தந்தை ஆனதையே எண்ணி ,
அவன் புன்னகைப்பான் !

அரசன் ஆண்டி என ,
யார் முகமாய் இருந்தாலும்
பிரிவினை ஏதும் இன்றி,
பிறக்கும் சிறு புன்னகைதான்!

மற்றவர் அகம் தனிலே ,
நுழைந்து அவர் என்னங்களை,
சட்டென மாற்றிடுமே ,
காண்பவரும் புன்னகைக்க..

இப்படி எல்லார்க்கும் தோன்றும் ,
அந்த புன்னகைத்தான் ,
காண்பவர் மனங்களையே,
ஆட்சி செய்யும் மந்திரமே!!

எத்துனை துன்பம் நம்மை ,
எதிர்த்து வந்த போதினிலும்,
முத்து போல் புன்னகைத்து ,
துன்பமதை விறட்டிடுவோம்!!!

நீக்கமற நிறைந்த வாழ்க்கை,
வேண்டுகிற எவர்க்கும் தேவை..
மனம் நிறைய சந்தோசம் !
உடல் நிறைய உற்சாகம்!!


(அன்பு தோழி @Laughing colour அவர்களின் வேண்டுகோளை ஏற்று அவருக்காக எழுதிய கவிதை.
நன்றாக இருந்தால் வழக்கம் போல உங்கள் விருப்பங்களை அளித்து ஊக்குவிக்க கேட்டு கொள்கிறேன்.
ஏதேனும் தவறுகள் இருந்தால் அல்லது உங்கள் கருத்துகள் இருந்தால் comment செய்யவும்)

அன்புடன் திருவாளர் பீன்
« Last Edit: November 20, 2023, 10:48:39 AM by Mr.BeaN »
intha post sutathu ila en manasai thottathu..... bean