Author Topic: ஏமாற்றம்..  (Read 862 times)

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 787
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
ஏமாற்றம்..
« on: November 17, 2023, 06:46:05 AM »
அன்பாய் உன்னோட இருந்தேன்
நீ என் உச்சமாய்!

நன்றாய் உன்னோடு கழித்தேன்
என் நாட்கள் துச்சமாய்.

எல்லாம் நீ ! எங்கும் நீ!
பொல்லார் தீங்கில் காப்பாய் நீ!
அன்பும் நீ! வம்பும் நீ!
மண்ணில் எந்தன் உயிரும் நீ!
செல்வம் நீ ! செல்லம் நீ!
சொல்லில் இன்பம் தருவாய் நீ!
காதல் நீ ! கனவும் நீ!
கண்ணில் காணும் யாவும் நீ!

என்றெல்லாம் என்னுள்
என்னமதை வளர்த்து..
நன்றென உன்னில்
அன்பினை விதைத்து..
குன்றென நீ
நம்பிக்கை அளித்து..
சென்றதேன் இன்று
என்னையும் விடுத்து?

வலி அதை தாங்கும்
உள்ளம் எனக்குண்டு.
வரும் துயர் நீக்கும்
ஆற்றல் எனக்கில்லை.
விதி அது செய்யும்
வினை இன்று நீயே..
கதி என்றிருந்த
எனை ஏமாற்றினாயே.
உன்னை நம்பி
தான் நானிருந்தேன்.
ஏமாற்றம் கண்டு தான்
நான் துடித்தேன்..

புரிதல் இல்லா வாழ்வில்
விரிசல் தான் மிச்சமாய்..

ஏன் நீங்கி போனாய்
நானே ஏமாற்றத்தின் எச்சமா?



அன்புடன் திருவாளர் பீன்
intha post sutathu ila en manasai thottathu..... bean