Author Topic: காவேரி..  (Read 710 times)

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 787
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
காவேரி..
« on: November 12, 2023, 07:20:06 PM »
குடகின் முகட்டில் தோன்றி
குழந்தை போல தவழ்ந்து
கொக்கரித்து குதூகளித்து
கொள்ளிடம் என பிரிந்து
கண்டவர் போற்றும்
கருணையின் ஊற்று

கழிமுகத்தெதிர்நிலம் எல்லாம்
குடிபுகுந்து கொண்டாடி
கழனி வாழ கொடை தந்து
கவி போல நயத்தோடும்
காற்று போல நளினத்தோடும்
கடந்து செல்லும் காவேரி ஆறு

தேவைக்கு நீர் தரும் தேவதையாய்
சில நேரம் சீறிப்பாயும் அரக்கனாய்
சாதி மதம் அற்ற சமத்துவ சான்றாய்
காதுக்குள் ரீங்காரம் இடும் வண்டாய்
எத்துனை அன்பை மனிதர்க்கு தந்து
பாய்கையில் பாடிடும் புது வித சிந்து

பிறப்பிடம் விட்டு புகுமிடம் மாறும்
பெண்களை போல அதன் செயல் ஆகும்
வங்காள விரிகுடா நோக்கி போகும்
வழிகளை எல்லாம் செழிப்பாய் ஆக்கும்
கழிமுகம் போய் தன் வேட்கை தீர்க்கும்
கடவுள் தந்த வரம் தான் நமக்கும்

தமிழகம் வந்ததும் மேட்டூர் அணையாம்
முக்கொம்பில் காவிரி கொள்ளிடம் இரண்டாம்
கரிகால் சோழனின் கல்லணை கண்டு
காவிரி பாசனம் எனும் பெயர் கொண்டு
பல திசை நோக்கி செல்லும் பயணம்
தமிழகம் செழிக்க காவேரி வரணும்..

அன்புடன் திருவாளர் பீன்
intha post sutathu ila en manasai thottathu..... bean