Author Topic: அன்னை தமிழ்..  (Read 748 times)

Offline Mr.BeaN

அன்னை தமிழ்..
« on: November 02, 2023, 11:22:57 AM »
இனிமை இலக்கணம் கொண்டொரு மொழியாம்



இனமொன்று செழித்திட

 தந்தது வழியாம்



உலகுக்கும் அம்மொழி

என்பதே முதலாம்



பழமையும் புதுமையும்

உள்ளது அதிலாம்



மனிதனை மதிப்பது

தான் நற்பண்பாம்



அம்மொழி கூற்றிலே

அது ஒரு அன்பாம்



இரு கரம் கூப்புதல்

தமிழனின் மரபாம்



அஃதினை சொன்னது

என் மொழி என்பான்



விருந்தினர் போற்றுதல்

வீரமும் ஞானமும்

என பல நல்லதை

சொல்லியே உலகினை

தன்வசம் படுத்திடும்

நம் தலை தனையே

உலகினில் நிமிர்த்திடும்

தாய் மொழி! தமிழ் மொழி!!

போற்றுவோம் நல் வழி...





தமிழினை வணங்கும்  திருவாளர் பீன்
intha post sutathu ila en manasai thottathu..... bean