அதிகாலை நேரம்.
அசந்த முகத்துடன் கண் விழித்தேன்
சூழ் இருட்டு.,
மெதுவாய் ஒளிக்கதிர் அறைக்குள் ஊடுருவ..
சுற்றிலும் ஓர் அமைதி!
அந்த அமைதியை கிழித்துக் கொண்டு
பறவைகளின் சப்தங்களும் பூச்சிகளின் கீச்சல்களும்..
என் காதுகளை தாக்க
ஏதோ ஒரு இனம் புரியா ஆனந்தம்!!
மெல்ல கண் விழித்து பார்த்தேன்..
சூரியக்கதிர் என் கண்களில் பட
இயற்கையின் உன்னதம் உணர்ந்தேன்!!
அதன் வெளிப்பாடே இந்த கவிதை..
கோள்களின் தலைவன்
கிழமையில் முதல்வன்..
மழைதனில் நண்பன்
மனம் குளிர்விப்பான்..
கோடை காலம்
அவனின் காலம்
மக்கள்யாவரும்
மயங்கிடச்செய்வான்!
தந்தை போல
கண்டிப்பான
அன்பை காட்டி
அரவணைத்திடுவான்.
யாதும் ஊரே
யாவரும் கேளிர்
என்ற நோக்கம்
உடையவனாக..
எல்லா உயிர்க்கும்
சமமாய் நீதி
வழங்கிடும் செங்கோல்
மன்னனும் அவனே..
தமிழர் மரபில்
அவனை வணங்க
தைத்திருநாளில்
பண்டிகை உண்டு..
அந்த நாளில்
வணங்கிடும் உழவர்
பசியை போக்கிடும்
கடவுளும் அவனே!!!
கதிரவன் ஞாயிறு சூரியன் என்று
பல பெயர் கொண்டவன் அவன் என்றாலும்
கனிவுடன் பூமியை காத்திடும் அவனே..
கன்னி பூமிக்கு அன்னையும் ஆவான்🙏🙏!!