Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 313  (Read 3041 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 313

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline ! Viper !

சிறகை விரித்து பறக்கும் பட்டாம் பூச்சிக்கு
தன் இறக்கையின் அழகை அதனால் ரசித்திட முடியாது
ஆனால் அதன் அழகிய ரம்மியங்களை
பிற உயிர்கள் ரசிக்க கூடும்

காலத்தின் பிடியில் சிக்கி
கால் நடைகள் நிழலை தேடி முன்னோக்கி செல்லும்
ஏதேனும் ஒரு சாய்விடம் கிடைத்திடாதா
ஏதேனும் ஒரு கரங்கள் கிடைத்திடாதா என்று
காலம் என்னும் நிழலை பின்தொடர்ந்து செல்கிறது இந்த கால் நடைகள்

மேகங்களுக்கு சேரும் இடம் என்று ஒன்று இல்லவே இல்லை
அது கடந்து செல்லும் பாதையில்
மேகங்கள் சந்திக்கும் பிம்பங்கள் அனைத்தும் ஒவ்வொரு கதைகளை சொல்லும்
ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு அனுபவத்தின் புதிய பாடம்


மனிதன் பயணிக்கும் வாழ்க்கையானது
கரையை தேடி தேடி நகரும் படகானது
ஒவ்வொரு கரையும் ஒவ்வொரு அனுபவத்தை மனிதனுக்கு கொடுக்கும்
அவன் ஆயுள் முடியும் வரை கரையை தேடியே பயணித்து
கடலிலேயே தன்னை கரையாக மாற்றி விடுகிறான்

அனுபவங்களும் நினைவுகளும் மட்டுமே
மனிதனை கடைசி கரை வரை எடுத்து செல்ல முடியும்
அதனால் உறவுகளை தேடுங்கள்
எவ்வளவு முடியுமோ அவ்வளவு அன்பை பெறுங்கள்
காலம் நமக்கு கற்பிக்கவும் செய்யும்
கட்டியும் அணைக்கும்
கட்டி அணைக்கும்பொழுது ரசித்திடுங்கள்
கற்பிக்கும்பொழுது விழித்திடுங்கள்

வாழ்க்கை ஒரு நீண்ட கால பயணம்
இன்னும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
அனுபவங்களையும் நினைவுகளையும்
என் கரையை நோக்கி அடையும் வரை
காத்திருக்கும் நான்
ஒரு சிறகில்லா பட்டாம்பூச்சி
[/b]

Offline VenMaThI



காலம்....

காலம் பொன் போன்றது என்பர்
காலத்தின் மதிப்பு தெரியாதார்..
பொன்னை விட காலம் பொக்கிஷமானது
காலத்தை வெல்ல மதியும் இல்லை
அதற்கு என்றுமே விலை மதிப்பும் இல்லை.....

நீ செய்யும்...
சரியான செயலும் தவறாய்ப்போகும்
உன் நேரமது சரியாக இல்லையென்றால்..
தவறான செயலும் சரியாய் மாறும்
உன் நேரமது உன்னுடன் கைகோர்த்து நின்றால் ..

நின்று போன கடிகாரம் கூட நாலொன்றில்
இரு முறை சரியான நேரம் காட்டும்பொழுது
நொடிப்பொழுதும் தளராத மனமுள்ள உனக்கு
சரியான நேரம் எட்டாக்கனி ஆகுமா???...

ஏக்கங்கள் நிறைந்தது இறந்த காலம்
கனவுகள் நிறைந்தது எதிர் காலம்
நிஜம் என்று இருப்பது இவ்வுலகில்
நித்தமும் நீ இருக்கும் இந்த நிகழ்காலமே....

முல்லாய் மாறி சொர்வின்றி ஓடுபவன்
நிதமும் காலத்தை வென்று கொண்டு இருக்கிறான்.
காலம் வரும் என்று நின்று கொள்பவன்
நிதமும் காலத்தை கொன்று கொண்டு இருக்கிறான்....

கருவுக்கும் காலமுண்டு குழந்தையாய் நம் கையில் வர
விதைத்த பயிருக்கும் காலமுண்டு உணவாய் நம்மை சேர.....
கனவுகள் நிஜமாக சில காயங்கள் பொறுத்திடு
காயங்கள் குணமாக காலம் வரும் பொறுத்திரு...

ஆறாத காயமில்லை தீராத வலியுமில்லை
முடிவற்ற பாதையில்லை விடியாத பொழுதுமில்லை
மாறாத மனமுமில்லை சீரான வாழ்க்கையுமில்லை....
பதிலற்ற காலம் என்றும் ஒன்றில்லை....

உன் பாரமும் மறையும் கானல் நீராய்
உன் சோகமும் கரையும் பனித்துளியாய்
காலமது கைகூட காத்திருப்பாய்
கலங்காமல் அனைத்தையும் வென்று நிற்பாய்....







Offline Nivrutha

என் முதல் கிறுக்கல்🦋

போராட்டங்களுக்கு பின்னர் கிடைக்கும் வெற்றி அலாதியானது,
உரசிக்கொண்டே உணர்த்தி செல்கிறது, புழுவாய் போராடி வண்ணங்களை வாங்கிகொண்ட பட்டாம்பூச்சி🦋

எரிச்சலூட்டும் எண்ண ஓட்டங்கள் இம்சித்து கொண்டிருந்த வேளையில் -
எட்டிப்பார்த்த பட்டாம்பூச்சி ஒன்று எட்டு வினாடிக்குள் என்னை, அதன் ரசிகை ஆக்கியது...🦋

வண்ணத்துப்பூச்சிகளுக்கு மட்டுமே தெரியும் - அத்தனை அழகான வண்ணங்கள்,
எத்தனை வலிகளை கடந்தபின் வந்தது என்று...🦋

கண்ட மாத்திரத்தில் நம் கவலைகளை கலைத்து விட்டு கடந்து செல்லும் பட்டாம்பூச்சியின் கடந்த காலம் கூட,கூண்டுக்குள் புழுவாக கொடூரமாகவே இருந்திருக்கிறது...🦋

காலம் புழுவையும் வண்ணத்து பூச்சியாக்கும்
- காத்திருப்போம் நம் வலிகளும் வண்ணங்களாய் வந்து சேரும் என்ற நம்பிக்கையோடு.🦋🦋

                           🦋  இவள் உங்களை போல் ஒரு ரசிகை நிவி.......🦋
« Last Edit: June 26, 2023, 06:01:21 PM by Nivrutha »

Offline mandakasayam

அனைவருக்கும் வணக்கம் 

பிறப்பு முதல் இறப்பு வரை நம்முடன் பயணிப்பது காலம் மட்டும் தான் .
மாற்றத்தை நாம் விரும்பவில்லை என்றாலும்
சூழ்நிலைக்கு ஏற்றவாறு நம்மை மாற்றிவிடும்

புழுவாக  அதன் கூடுகளில் அனைத்து துன்பங்களையும் சிக்கல்களையும் சந்தித்து
பிறகு அதற்கான நேரம் வந்த பிறகு அது

எல்லையில்லா சுதந்திரமும்  ஆனந்தமும் அடைந்து சிறகடித்து மேல் நோக்கி பயணித்து  புது உலகை
இரசிக்கிறது...

பல வண்ணங்கள் நிறைந்த வண்ணத்துப்பூச்சியாக வலம் வருகிறது ...
சில வலிகளும் மறக்கமுடியாத வடுகளுக்கு
காலம் தான் சிறந்த மருந்து!!!!

அனைத்தும் இழந்தோம் இனி இழக்க ஏதுமில்லை என்ற எண்ணத்தை அகற்றி
நமக்கான  நேரத்தை இந்த காலம் வரையறுத்து கொடுக்கும்!!!!

   தன்னம்பிக்கையுடன் தடைகளை அகற்றி
நடந்ததை மறந்து நடப்பதை நினைக்க வேண்டும்!!!!

காடிகார முட்கள் கூட பின்னோக்கி பயணிக்காது இழந்த நேரத்தை மீண்டும் மீட்காது!!  அது போல

நாமும் முன்னோக்கி பயணித்தால் எதிர்காலத்தை மட்டுமல்ல எக்காலத்தையும்
வெல்வோம்!!!!!!

அன்புடன் : மண்ட கசாயம்
« Last Edit: June 27, 2023, 08:23:28 AM by mandakasayam »

Offline Minaaz

பருவங்கள் பல மாறினாலும் என்றும் நிலையானது தன்னம்பிக்கை என்ற உந்து சக்தியே..

பட்டாம்பூச்சியென மாறிடும் நிலைதனில் கற்றுக் கொள் காலத்தின் மகிமையையும் முயற்சியின் உண்ணதத்தையும்.

பல வண்ணங்கள் வாரி தெளித்திடக் கூடும் என்று எண்ணிராத பூச்சி முட்டையிலிருந்து நிறையுடலி என மாறுகையில் வையகமே வியந்து நிற்கும் நிலை..

குழந்தைப்பருவமதனை குடைபிடித்துக் காவலாய் காவல்காத்த பெற்றோரினது நிலைதனை உணர்ந்திட எத்தனிக்கிறது..

பிஞ்சு என நசுங்காமல் அணைகட்டி உயிர்ப்பிக்க ஆரம்பமாகும் பருவமது இளமைதனை அடையும் வேளைதனில் இன்சொல்லுடனான தனித்து துணிந்தெடுக்கும்  முடிவுகளுடன் திருப்பங்கள் பல செதுக்கிக் கொண்டு தொடரூந்து பாலம் என பின்தொடர்கிறது தன்னுடன்..

கதி கலங்கும் பீதியுடன் பிடரி வலிக்க சிந்தனைகளையும் தீட்டிக்கொண்டு விடாமுயற்சியினை வித்தாக்கி விளைவிக்கும் வேளைதனில் காலமும் கண்ணை மூடிக்கொள்ளும் தருணம், அகம் தளராத மந்திரமாய் பொறுமை எனும் பொக்கிஷம் ஓர் அரசனாக உருமாற்றிவிடும் விந்தை...

கண்ணீர் மல்க விதி மீது பலி சுமத்தி முயற்சியின் உற்ற நண்பன்,  வெற்றிக்கான வருகைக்காய் தவமிருக்கும் பொழுதுகளில் தோல்வி என்ற அனுபவத்தின் அன்னையும் தன்னை உரசிக் கொள்ளும்..

ஆயினும் தோல்வி எனும் கண்ணோட்டத்தில் விழிகள் வியாபித்தால் விதியும் வீரமாய் முடியாதென தலைநிமிர்ந்திடும்
அதுவே அன்னையென அரவணைத்தால் அதுவே உனக்கான அனுபவமாய் உருவெடுத்து வெற்றிப்படியில் ஏற்றிவிடும் ஏணியென அமைந்திடும்...

ஆகவே மானிடா, உன்னை அடையாளமிட்ட உன் பெயர் உலகில் வரலாரென கல்வெட்டில் தடம் பதித்திட, சிறந்த சிந்தனைகளையும் விடாமுயற்சிதனையும் ஊக்கியாய் உணவளித்து ஒவ்வொரு நாளிகையையும் வர்ணமயமாக்கிடு...
என்றோ ஓர் நாளிகை உன்னை தீட்டும் வரலாற்று எழுதுகோலை ஒழித்து வைத்திருக்கும் என்பதில் ஐயமேதுமில்லையடா...!!.....

Offline IniYa

பிறப்பின் அடையாளத்தை வைத்து உன்னை மதிப்பிட முடியாது,

வரம் அழித்த உலகம் உன்னை வைத்து சொல்கிறது நீ சாதிக்க பிறந்த உயிரியின் வடிவம் நிகழும் சரித்திரத்தின் படைப்புகளை வைத்து ,

உன்னை பூமிக்கு கொண்டு வந்த பிரம்மனின் நினைவுகள் சப்தமற்று, அந்த நொடியில் உயிர் பெற்று பூமி அடைந்தேன்!

உன் வரவு மற்றவர்களுக்கு அருவருப்பாக இருந்த போதிலும் உன் முயற்சி என்றும் கைவிடாமல் இருந்தாய்!

ஒவ்வொரு காலத்திலும் என்னை பற்றி உணர்த்த நினைக்கும் போது பிடிக்காமல் போகும் உலகத்திற்கு என் முயற்சியை கைவிட மனமில்ல அந்த ஒரு நேரம் அடையும் போது உலகனின் வல்லமை போற்றி நிற்பேன்! பதிப்புடன்!

என் மேல் போர்த்திய விதிகளை வைத்து சந்தோஷ காலம் அமைத்தேன்!
அமைத்த நாட்கள் வலியை வலிமை கொடுத்து வெற்றியை நோக்கி பயணித்தேன்!

பயண பாதை கடுமையாக இருந்தாலும் உள்ளுணர்வு வெல்வேன் என்றது!
கடந்த காலத்தை நம் பதிப்பில் வைக்காமல் எதிர்காலத்தின் கனவில் செலுத்துவேன்!

தடைகளை கண்டு ஓடாமல் உன் முன் நான் எடுத்து வைக்கும் அடி எண்ணிள் அடங்கா !
நிலைகள் பல தாடினாலும் என் நிலை என்பது அறிந்து செயல் படுவேன்!

வடிவம் பல கடந்தாலும் என் குணத்தை மாற்றும் நான் மனிதனல்ல!
ஒவ்வொரு கருவில் நிலை அறிந்து காலதோஷ குறிப்பிற்கு ஏற்று உருவெடுபேன்!

புழுவின் அருவருப்பு பூ ச்சியின் வெளி தோற்றம் இறுதியில் வண்ணம் பூசி கொண்டு வெளி நடப்பின் உச்சக்கட்டம் நான் என்றும் வண்ணத்துப்பூச்சி!🦋
« Last Edit: June 27, 2023, 08:38:43 PM by IniYa »

Offline TiNu




உலகின் எந்த ஓர் படைப்பிலும்.. கடவுளின் பங்கைவிட.
காலத்தின் பங்குதான் அதிகம்..

ஓர் உயிரோ அல்லது ஓர் உயிரற்ற பொருளோ..
பல மாற்றங்களுக்கு பின்னே உருப்பெறுகிறது..

கண்முன்னே பறக்கும் பட்டாம்பூச்சியோ.. இல்லை
கண்முன்னே தவழ்ந்து சிரிக்கும் குழந்தையோ...

தனிமங்களின் இருந்து உருப்பெறும் ஆயுதங்களோ  இல்லை
தாவரங்களில் இருந்து கிடைக்கும் உணவு பொருளோ..

எல்லாமே காலத்தின் சக்கரத்தின் கீழ் சுழலும்..
கட்டாயத்தில் கட்டுண்டு தன்னிலை அடைகிறது..

உருமாறும் உறுபொருள் எல்லாம் மெல்ல சிரித்தது..
காலத்தால் உருமாற்றம். இல்லை உருமாற்றத்தால் காலமா?

இரு கண்களிலும்..  பார்வை இருந்தும்..
பார்வையில்லா குருடனாய்.. விழித்தேன்..

தேகமெங்கும் உணர்ச்சிகள் இருந்து
உணர்வில்லா ஜடமாகிற மாறியது.. மனம்...

என் கண்களையும் என் சிந்தையையும் முடமாக்கும் 
என்னுள்  தோன்றிய அதே.. விடை தெரியா வினா...

 காலம் எங்கே தொடங்கியது... காலம் எப்படி நகர்கிறது...
காலத்தின் அளவுகோல் என்ன?.. காலத்தின் முடிவு தான் எங்கே?
 
கடிகாரத்தில் முற்கள் நடுவே சுழல்கிறதா..  காலம்.. இல்லை..
கதிரவனின் முகம் பார்த்தே நகர்கிறதா... காலம்.. இல்லை...

உயிர்களின் தோன்றலில் தொடங்குகிறதா.. காலம்.. இல்லை..
உயிர்களின் மறைவில் மறைகிறதா ... காலம்...

காலம் வாழ்வின் கண் போன்றது... என்பர் சிலர்
வாழ்வின் மீட்க முடியாதது காலம்... என்பர் பலர்

காலத்தை கையாளத்தெரிந்தவன்.. அறிவாளியாமே....
அந்த காலத்தை கடந்து நிற்பவன் ஞானியமே.....

உண்மையில் காலம் என்பது எது? மனம்..
நீ சொல்... நிஜத்தில் காலம் என்பது என்ன ?

ஓர் தொடக்கத்திற்கும் முடிவுக்குமான  இடைவெளி ...  காலமே..
ஓர் முடிவுக்கும் பின் வரும் ஆரம்பத்திற்கான காத்திருப்பும் காலமே..


« Last Edit: June 28, 2023, 02:54:22 PM by TiNu »

Offline Madhurangi

நுரைக்கும் பெரு ஆழியின்
மூச்சு திணறலின் உணர்வுடன் சில நாள்..
ஆறுதல் தேடுமிடமெல்லாம்
ஆயுதம் இருக்குமென பயத்துடன் சில நாள்..

சொல்லாத புலம்பலை
இல்லாத ஏக்கங்களை
ஏட்டில் விழாத எழுத்துக்களின் வலிகளை
கரைத்துக்கொண்டிருக்கிறேன்..
நட்புகளின் சம்பாஷணைகளோடு...

புரண்டு விழுந்து கரை தொடும் வரை
அமைதியாய் இரு...
அழுது முடித்தும் ஆக வேண்டியதை பார்க்க வேண்டியது நீதான் என்று
அறைந்து கூறியது நிஜம்...

வண்ணங்கள் தோன்றும்
வாட்டங்கள் மறையும்
என்றோ ஒரு நாள் எல்லாம் மாறும்
நம்பிக்கை எனும் ஒற்றை சொல்லில்
ஊசலாடும் உயிருடன் நான்...