Author Topic: உணர்வுகளும் உரிமைகளும்....  (Read 795 times)

Offline SaiMithran

பேசினால் தான் பேச வேண்டும் என்பதில்லை பேசாவிட்டாலும் பேசலாம் உறவுகள் நிலைக்க வேண்டும் என்று நினைத்தால்...!!
அழைத்தால் தான் செல்ல வேண்டும் என்பதில்லை அழைக்காமலும் செல்லலாம் உரிமைகள் நிலைக்க வேண்டும் என்று நினைத்தால்...!!
பேசாவிட்டாலும் பேசுவது  பேசுவதற்கு ஆள் இல்லை என்பதற்கல்ல எத்தனை பேர் இருந்தும் சிலரது இடத்தை இன்னொருவரால் நிரப்ப முடியாததால்...!!
அழைக்காமல் போவது செல்வதற்கு வேறு இடமில்லை என்பதற்கல்ல எங்கு சென்றாலும் சில உரிமைகளை எல்லா இடங்களிலும் பெற முடியாததால்...!!       
உணர்வுகள் மதிக்கப்படாத இடத்தில் உறவையும் உரிமையையும் தேடுவதால் தான் உணர்வுகளும் பொய்ப்பிக்கப்படுகிறது ....!!!!

சாய் மித்ரன்..... கிறுக்கலில் ஒரு கவிதை ❤❤❤
« Last Edit: July 20, 2021, 04:21:44 PM by SaiMithran »
Saimithran 😄😄😄