Author Topic: சமூக வலைத்தளம்  (Read 1011 times)

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
சமூக வலைத்தளம்
« on: July 16, 2021, 08:26:59 PM »


பொய்வேடம் தரித்திருப்பர்
பொல்லாங்கு கதைகள் பல
பொறுப்பின்றி பேசி திரிவர்
பொறாமையில் சிலரை புறக்கணிப்பர்
பொறுக்க முடியாமல் சிலரை குற்றம்சாட்டுவர்

பொறுத்து பொறுத்து பார்ப்பர்
பொறுக்க முடியா கேள்விகளுக்கு
பொறுமை இழந்து
பொசுக்கென்று கோவத்தை வெளியிடுவர்
பொய்யரட்டையை ஆனாலும் தொடர்ந்திடுவர்

பொருப்பில் பொதிந்து பொங்கி வரும்
பொன்னியின் நளினத்தில் இருக்கும்
பொன்னிற மலர்களை கவர
பொதுமன்றத்தில் கொஞ்சல்களும் இருக்கும்,
பொய் கெஞ்சல்களும் இருக்கும் பேச்சில்
பொறாமை நஞ்சுகளும் கலந்திருக்கும் ஆனாலும்
பொக்கிஷமாய் சில நெஞ்சில்  நினைவுகளாயிருக்கும்

பொய்யும் புரட்டும் மலிந்திருப்பது தெரிந்தும்
பொய்யையே நிதமும் பேதமின்றி
பொய்யாய்  பேசி பழகி திரியும்
பொய்யர்கள் நிறைந்த  அரங்கமிது

பொக்கிஷமாய் பல செய்திகள்,
பொதுநலன்கள் பலவகையில்
பொதிந்திருந்தும் அதை சிறிதும்
பொருட்படுத்தாது அவரவர்கு தகுந்தாற்போல்
பொய்யும் புரட்டும் பேசித்திரியும்
பொதுமன்றமெனும் சமூகத்தளமிது



உங்கள் புதுமைக்கவி
சுந்தரசுதர்சன்

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்