Author Topic: என் இனிய தோழி TINU  (Read 881 times)

Offline thamilan

என் இனிய தோழி TINU
« on: May 25, 2021, 02:14:21 AM »
எங்கேயோ பிறந்த நதியும்
எங்கேயோ தவழ்ந்த நதியும்
கடைசியில் கடலில் கலப்பது போல
எங்கோ பிறந்து எங்கேயோ வளர்ந்து
FTC எனும் கடலில் சங்கமித்தவர்கள்
நானும் எனது அன்புத் தோழியும்

அரட்டை அரங்கத்தில்
சந்தித்தோம்
அளவே இல்லாமல்
அரட்டை அடித்தோம்
வெறும் பேச்சினில் தொடங்கிய நட்பு
போகப் போக மனத்துக்குப் பிடித்த
நட்பாக மாறியது
மனம் விட்டு பேசும் அளவுக்கு

நாங்கள் பேசுவதை பார்ப்பவர்களுக்கு
இவர்கள் நண்பர்களா இல்லை
காதலர்களா என்ற சந்தேகம் தோன்றும்
சில நேரம் அடித்துக்கொள்வோம்
அடுத்த நிமிடம்
உருக உருக பேசுவோம்
பார்ப்பவர்களுக்கு இவர்கள்
பைத்தியங்களா என்றும் எண்ணத் தோன்றும்

வார்த்தைகள் தான் கொரோனா போல
உருமாறுமே தவிர
எங்கள் மனதில் நட்பு மட்டுமே
பாசத்துக்கும் காதலுக்கும் ஒரு எல்லையுண்டு
நட்புக்கு கிடையாதே

அவள் உனது நண்பியா என்றால்
ஆமாம் நண்பியே தான்
காதலியா என்றால்
காதலியே தான்
நான் காதலிப்பது அவளை அல்ல
அவள் தூய்மையான நட்பை

அவள் அழகியா என்றால்
சத்தியமாக தெரியாது
அவள் ஒல்லியா குண்டா
கருப்பா சிவப்பா
எதுமே தெரியாது
ஏன் தெரிய வேண்டும்
அழகிய குணம் இளகிய மனம்
எது சொன்னாலும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளும்
மனப் பக்குவம்
மனதால் என்றும் அவள் பேரழகியே

காலங்கள் மாறும்
காதலும் மாறும்
நட்பு என்றுமே மாறாது
என்றும் எனது மனதில்
நல்ல நண்பியாய் வீற்றிருக்கும்
இனிய தோழி TINUவிற்கு
இந்த கவிதை சமர்ப்பணம்
« Last Edit: May 25, 2021, 05:40:07 AM by thamilan »

Offline TiNu

Re: என் இனிய தோழி TINU
« Reply #1 on: May 25, 2021, 11:15:55 PM »

நன்றி... கண்களில் நீர் வரவழைத்து விட்டது...

அன்பெனும் ஆணிவேரில்...
அழகாய் ஆழமாய் எழுந்த..
இலக்கியங்கள் என்னும்....
வலுவான கிளைகளின் மீது....
தீஞ்சுவை கவிதைகள்..
தேனொழுகும் புதினங்கள்.. 
என்னும்.. 
அற்புத இலைகளின் நடுவே...
பூத்து குலுங்கி சிரிக்கும்...
நம் நட்பெனும் தமிழுணர்வு...

தமிழா!!! தமிழால் மலர்ந்த நட்பு!!!
அத்தமிழ் போல் என்றும் மாறாது! மறையாது!!



Offline எஸ்கே

Re: என் இனிய தோழி TINU
« Reply #2 on: May 26, 2021, 09:04:27 AM »
தமிழன்  👍மிக அருமை
Tinu வின் நட்பு குறித்து கவிதை .....
ஆம் Tinu வின் நட்பு மிக ஆழமான கடல் போன்றது....
மிக தூய்மையான நட்பும் கூட ....
இருவருக்குமான நட்பின் பிணைப்பு நானே கவிதை எழுதியது போன்ற உணர்வு.....
தரமான வரிகள் நட்பின் இலக்கணம் கூறும் கவிதை.....
எனக்கும் Tinu விற்கும்  உடனான நட்பை நினைவு கூறும் ஆழந்த வரிகள்....
Tinu வுடன் நட்பு பாராட்டும் விதமாக உள்ளது....
தங்களின் படைப்பை எதிர் பார்க்கும் ரசிகன் நான் ....



 மிக அற்புதம் Tinu  கவிதை 👍
மேலும் கீழே உள்ள வரிகள் அட டா எத்தனை கற்பனை வளம் ....
தமிழின் ஆழந்த சொற்கள்...
" தீஞ்சுவை கவிதைகள்...
தேனொழுகும் புதினங்கள்.... "
Cute Angel congrats 👏 மேலும்  எதிர்பார்க்கும் உன் அன்பு நண்பன் ...
« Last Edit: May 26, 2021, 09:51:25 AM by YesKay »



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்