Author Topic: காதலி....  (Read 798 times)

Offline சிற்பி

காதலி....
« on: March 02, 2021, 04:18:20 PM »


அன்னை தந்தை
ஆயிரம் உறவுகள்
இருப்பினும்
அன்பின் மிகுதியால்
அவளின் நினைவுகள்

சேர்ந்தோம் பிரிந்தோம்
என்றவள் போகாமல்
வாழ்வின் வசந்தங்களை யெல்லாம்
வாரிமுடித்துக் கொண்டு போய்விட்டாள்

அன்பின் தோல்வியா
அளுமையின் தோல்வியா
அவளின் தோல்வியா
எனது தோல்வியா
எது தான் இந்த காதலின் தோல்வி

காதல் இல்லாமல்
காவியங்கள் இல்லை
இந்த கவிஞர்களும் இல்லை
நீயும் நானும் கூட இல்லை
என் காதலிக்கு மட்டும்
அது புரியவில்லை

உறக்கம் இல்லை
பசியும் இல்லை
நினைவுகள் மட்டும்
நிஜங்கள் இல்லை

உயிரின் பிரிவா
உடலின் பிரிவா
எது தான் இந்த
காதலியின் பிரிவு....

இலக்கண வரம்புகளை
மீறியது காதலா
கவிதையா.....
                                     
 
                               சிற்பி....

❤சிற்பி❤