அன்பு தங்கையே ரித்திகா
அன்பின் தேன் துளி நீயே
அண்ணன் நான் இன்று
சொல்கிறேன் பிறந்தநாள் வாழ்த்தொன்று
இந்த உறவு என்றும் நிரந்திரம் என்று
கனவுகள் காண்போம் தினமும் இங்கு
உன் செல்ல சின்ன சிரிப்பே
நம் இல்லம் ஆக்கிடும் பூஞ்சோலை
கண்ணின் முன்னே கனவாய் நிற்கும்,
உன் பாசம் மட்டும் மறக்க முடியாது கண்ணே
பாடும் பறவையாய் இனிமை தரும்,
என் தங்கை நீ தான் வரம் தரும் தேவதை
வாழும் பாதையில் தடைக்கற்கள் நிற்க
தகர்த்திடு அண்ணன் துணை நிற்க
காற்றாய் வீசும் இனிய பாசம்,
கண்ணில் என்றும் பொற்கனவாய் நீ.
வாழ்வின் அழகான அத்தியாயம் நீ
எந்த நாள் கடந்து போனாலும்
உன் சிரிப்பு தான் என் சந்தோஷம்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரித்திகா
ஹாப்பி ஹாப்பி பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரித்திகா
ஹாப்பி ஹாப்பி பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Joker