Author Topic: சருகாக உதிர்ந்தேன் நான்  (Read 889 times)

Offline thamilan

உன் பார்வை கயிறுகள்
என்னைக் கட்டியபோது
என் முரட்டுத்தனம்
உதிர்ந்தது

உன் வார்த்தைகள்
என்னைக் கட்டியபோது
என் கோபம் உதிர்ந்தது

 உன் அறிவு
என்னைக் கட்டியபோது   
என் ஆணவம்
உதிர்ந்தது

உனக்காக என்னை
அழகாக்கிக் கொண்டதில்
என் வருவாய்
உதிர்ந்தது

கண்ணே உனக்காக
காத்திருந்த போது
என் கடமை
உதிர்ந்தது

உனக்காக மட்டும்
நேரம் ஒதுக்கியத்தில்
என் நட்பு
உதிர்ந்தது

என் கையில் ராக்கி
கட்டிய போது
என் காதல்
உதிர்ந்தது

ரகசியமாக ஏங்க வைத்த
ராட்சசியே
அண்ணா என்று நீ
அழைத்த போது
என் இதயம்
உதிர்ந்தது


இது FTC இணையதளத்தில் உலா வரும்
நண்பிகளுக்கு சமர்ப்பணம்



« Last Edit: June 20, 2020, 08:52:26 AM by thamilan »