Author Topic: நீ மனிதன் என்றால்  (Read 873 times)

Offline சிற்பி

நீ மனிதன் என்றால்
« on: December 30, 2019, 09:42:34 PM »
நீ மனிதன் என்றால்
உன்னை நேசிப்பவர்களுக்கு
விடையாக இரு
வெறுப்பவர்களுக்கு
கேள்வியாக இரு

ஏன் என்றால்
உன் பின்னால்
இருப்பவர்களுக்கு
தெரியாது
நீ வகுத்த பாதை
எவ்வளவு கடினம் என்று

உன் கண்ணீரும்
கனவுகளும்
உனக்காக உன்னால்
எழுதப்பட்ட து

நிச்சயமாக
மனிதம்
இந்த உலகத்தில்
இருக்கிறது என்று நம்பு
ஆனாலும் நீ
அதை அடுத்தவனிடம்
எதிர்பார்க்காதே

நீ உண்மையில்
மனிதன் என்றால்
இந்த வாழ்க்கையை
புகழ்ந்தாலும்
இகழ்ந்தாலும்
புன்னகையோடு
கடந்து செல்.......

.........
சிற்பி


upload free photo
❤சிற்பி❤