Author Topic: குளிரோவியம் உருவானது  (Read 1179 times)

Offline SweeTie

குளிரோவியம் உருவானது
« on: December 07, 2019, 07:58:14 PM »
புதிதாக பூமியில்  விழுந்த வெள்ளிப் பனித்துளிகள்
அடர்ந்து  பரந்து  பஞ்சு மெத்தையாய்  விரிந்து
பார்ப்பவர் கண்ணைக் கவர்ந்து
காதலரை  மயங்கவைக்கும்  அழகோவியம்.

மரங்களில் தேங்கி நிற்கும்  பனிப்பொதிகள்
சூரிய கற்றைகளை  ஊடுருவிக்கொண்டு
மினுமினுக்கும்   காட்சியில்  மயங்காதோர் உண்டோ?

இலைகளை உதிர்த்த மரங்கள்
கிளைகளுடன்  வாடிநிற்கும்  தருணம்
இயற்கை அன்னை  சொரியும் இளம் பனித்துளிகள்
பட்டும்  படாமலும்   மரங்களில்
தொக்கி நிற்கும்  அழகோ அழகு