Author Topic: கவிதை அல்ல கடிதம்  (Read 969 times)

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 232
  • Total likes: 560
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
கவிதை அல்ல கடிதம்
« on: June 17, 2019, 10:36:48 PM »
என்  அன்பே !   உன்னிடத்தில்  நான் பேசியதை  விட
பேச  நினைத்ததே  அதிகம்.

என்னில் இடை விடாத  கவிதைகள்  நீ,  உன்னில்  இடைவெளியில்
கூட நிரம்பாத  உறவாய் நான்.

என்னுள் இன்றும் என்றுமான தேடல்  நீ,  உன்னில்
நீ  தேட விரும்பா  உறவாய் நான்.

உறவே  உன்னை  நினைவுகளால் மட்டும்  அல்ல,
நிழலாகவும்  பின் தொடர்கிறேன்.

உன்னை  காணும் தொலைவில்  நானும்  இல்லை,
என்னை  நினைத்து  பார்க்கவும்  நீ விரும்பவில்லை.

என் துயிலிலும்  உன்னை  நேசிக்கிறேன்,  என்
துயரத்திலும்  உனையே  விரும்புகிறேன்.

முள்ளினால் ஆனபோதும்  செடி  ரோஜாவை  தாங்கி நிற்கவே  விரும்புகிறது,
அதுபோல என்னை  பற்றி நீ சிந்திக்க  மறப்பினும், என்  உள்ளம்  உன்னை நேசிக்க  நிறுத்தவில்லை.

என்றும்  உன்னை நேசிக்க   மறவா உறவாளன்  நான்...... MNA....