Author Topic: தந்தையர் தினம்  (Read 893 times)

Offline JasHaa

தந்தையர் தினம்
« on: June 16, 2019, 09:57:59 AM »
￰தேவதையாய் பிறந்தாலே
தேகமெங்கும் சிலிர்த்தேனே
பிறந்த மழலையின் அமுதமொழி கேட்ட நொடி 
கண்ணில் இருந்த  ஈரம்  மனதினை  நனைத்தது 

அவளது மழலை  சிரிப்பினில்
ஆயிரமாயிரம் அர்த்தம் !
கோடிகோடியாக  இன்பமது !!
வீட்டினுள்  உள்ள  அவளது அதிகாரம் 
அவளது கொஞ்சும்  கிள்ளைமொழியில் ...!!

முத்தம் கேட்ட நொடியினில் கிளிக்கி சிரித்து
நெளிந்து  குழைந்து கன்னத்து முத்தம்  தந்து 
எனக்கு சொத்தையே  தந்ததை  போல 
சிரித்து செல்வாள்  சின்னச்சிட்டு 

அப்பா  என  கூடிகுலவிய எனது  மகள் 
பூவாய் மலர்ந்து  கதவின் மறைவில்  நின்று 
வீசிய  வெட்கப்புன்னகையில் 
நொந்தேனே உலகின்  பிரிவினைவாதத்தை
 
பிரவேசித்த மனைவியின்  வலிக்கு  குறையாத  வலியடா
என் மகள் வீடுதிரும்பும்  வரை நான்  பிரசவிக்கும்  வலி 
மகள் என்பவள்  அன்பின் சுரங்கம் 
அவளது அன்பு எனும் சிறையினில்  என்றுமே 
ஆயுள்  தண்டனை  !
ஒவ்வொரு ஆணும்  விரும்பி  புகும்  சிறை  அது  !!!

மகளில்லாத தந்தைகளே,
சகோதரியில்லா சகோதரர்களே,
எம்பெண்களை  கண்ட வினாடிககில்
 கடந்துசெல்ல  விட்டுடுகள்!
கண்ணில் கண்ணீரோட,  இதயத்தில்  ரத்தக்கசிவோடு 
தந்தைகள் நாங்கள் காத்துகொண்டுளோம்..!