மனிதர்கள்......
அவர்கள் .......
தங்களுக்குள் தாங்களாகவே
வாழ்கிறார்கள்
பிறரை பற்றியும்
தங்களின் அறிவுக்கு
அப்பாற்பட்டு சிந்திப்பதில்லை
பொருளை தேடி
பொருளில்லாமல் அழைகிறார்கள்
பொருளில்லாமல் வாழ்ந்து
பொருளை இழக்கிறார்கள்
காலங்களற்ற பாதையில்
அவர்களின் கால்கள் நடக்கிறது
காலங்காலமாக மனிதம்
இப்படி தான் போகிறது
எத்தனையோ சுகமுன்டு
வாழ்வில்
எவ்வளவோ துயருன்டு
வாழ்வில்
அதில் நாம் நிலைபெறவும்
நிறைவுறவும்
நிழல்களை தான்டி
நிஜங்களில் மோதி
உயிர் பெற வேண்டும்
உயர்வுறவேண்டும்
இருளினிலே நாம்
கேள்விகள் கேட்டு
வெளிச்சத்திலே
அதன் விடைகளை தேடி
விளைவுற வேண்டும்
புண்படவே மனம்
பண்படவே
சிலர் கண்படவே
நாம் கலங்குகிறோம்
வாழ்வதனால் நாம்
வாழ்வதில்லை
வீழ்வதனால் நாம் வீழ்வதில்லை
போகின்றோம்
நாம் வருகின்றோம்
போவதற்க்கே நாம்
வந்துள்ளோம்
வாழ்கின்றோம் பின்
வீழ்கின்றோம்
எத்தனை நாம்
பெறுகின்றோம்
அத்தனையும்
நம் செயலில்லை
நம்புங்கள்
நம் பரம் பொருளை
தேடுங்கள் அதன்
மறை பொருளை
....சிற்பி.
