Author Topic: கற்பு  (Read 1077 times)

Offline JasHaa

கற்பு
« on: February 09, 2019, 11:41:36 AM »
நீ கைதொட்டதும் கசங்கிவிட 
கற்பு என்ன காகிதமா?

நீ  தீண்டியதும் எரிந்து விட
கற்பு என்ன தீக்குச்சியா?
 
நீ பற்றி இழுத்ததும் கிழிந்துவிட
கற்பு என்ன கந்தல் துணியா?

என் மானம் என்ன மேலாடையா 
நீ அவிழ்ததும் அழிந்து போக?

மானம் ஐந்தரை மீட்டரில் இல்லையடா
மனித மிருகங்களே!
அது வஞ்சி அவள் விழிவிச்சினில் உள்ளதடா !!

திரௌபதி  அழைத்ததும் வந்தவன் பார்த்தசாரதி !
வந்தவன் தந்த மேலாடையில் இல்லையடா அவளது  கற்பு ...

அவன் அவள் மானம் காக்க வரவில்லையடா!
கயவர்களுக்கு பாடம் சொல்லித்தர வந்த பரந்தாமன் அவன் !!
« Last Edit: February 09, 2019, 11:51:35 AM by JasHaa »