நீண்ட நாட்களுக்கு பிறகு
மீண்டும் ஏதோ ஒரு
மனபாரம் என்னுள்
நிஜத்தை தொலைக்காமல்
வாழ்வது கடினமானதோ
நிஜத்தை தேடும் பொழுதெல்லாம்
நிழல் கூட கேலியாய்
சிரிப்பதை போல
மனதுக்குள் தவிப்பு...
பொய்யாய் பழக தெரிந்து இருந்தால்
என்னை சுற்றி ஒரு கூட்டம்
இருந்து இருக்க கூடும்
நிஜத்திற்கு
ஆயுள் குறைவாய் இருப்பினும்
நிஜத்தை தொலைக்காமல்
இருக்க முயற்சி செய்கிறேன்..